தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்பில் வடமாகாணசபையில் பிரேரணை சமர்ப்பிக்கக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் விசேட அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த பல தசாப்தகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளமையை மறுக்கமுடியாது.
ஆனால் இது தொடர்பில் வடமாகாண சபையோ வேறு எந்த தரப்பினரோ பிரேரணைகளை முன்வைப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கீகரிக்காது.
தற்போது சிறிலங்காவின் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான பிரேரணைகள் அந்த விசாரணையை பலவீனப்படுத்துவதாக அமையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணைக்கும் ஈழ படுகொலைகள் தொடர்பில் வட மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிப்பதற்கும் சம்பந்தமே இல்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விஷயத்தில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளைப் போல் தன்மானம் இழந்து செயல் படக் கூடாது.இன அழிப்பு விவகாரத்தில் சிவாஜி லிங்கம் ஐயா உறுதியாக இருப்பதைப் போல் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இருக்க வேண்டும்.இந்த பிரேரணையை கூட வட மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தயங்கினால் அது ஈழத்தின் மீது சிங்களவனின் ஆதிக்கத்தை மேலும் இறுகச் செய்வதற்கு வழி வகுக்கும்.உண்மையில் நடந்த சம்பவம்தானே அது.அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள என்ன தயக்கம்?