காணமல் போன எம்எச்370 தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை பிரதிநிதிக்கும் ஓர் அமைப்பு அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த முழுசரக்குப் பட்டியல் ஒளித்துவைக்கப்படிருப்பது ஒரு சதியா என்று வினவியுள்ளது.
200 பேரை ஏற்றிச் சென்ற எம்எச்370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எவ்விதத் தடயங்களுமின்றி காணாமல் போய்விட்டது.
விமானத்தில் சரக்கு வைக்கும் இடத்தில் ஏற்றப்பட்டிருந்த அனைத்து சரக்குகளின் முழு பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று வாய்ஸ் 370 என்ற அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
சம்பவம் நடந்த இரண்டு மாதத்திற்குப் பின்னர்தான் சரக்கு பட்டியல் மே 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இரண்டு மாதகால தாமதத்திற்குப் பின்னரும் வெளியிடப்பட்ட பட்டியல் முழுமையானதல்ல என்று அந்த அமைப்பு கூறியது.
ஜூலை மாதத்தில் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 பயண விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் முழு பட்டியல் ஏழு நாட்களுக்குள் வெளியிடப்பட்டது. ஏன் இந்த வேறுபாடு என்று வாய்ஸ் 370 வினவியுள்ளது.
விமானம் இருக்கும் இடம் உறுதியாக தெரிந்தாயிற்று. அதில் இருக்கும் பொருட்களை நம் கண்ணுக்கு மறைத்து விட்டு விமானத்தின் உடைந்த பாகங்களை மட்டும் காண்பிப்பார்கள். இந்த விமானத்தில் பயணித்தவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். காரணம் இன்றி உயிர் துறக்க நேரிட்டது இயமனின் குற்றமோ?.
கப்பல கடதிட்டாணுங்க ! ,இந்த மலாயகாருங்கள் பைபிள நெருப்பு வச்சி கொளுதுரப்பவே எனக்கு தெரியும் ,கப்பல் கப்பல் கானா போகும் என்று !அடுத்த வருஷம் ஒரு சம்பவம் நடக்கும் பாருங்க ,தலைய சுத்த போகுது !!! எப்படி தெரியும் என்று கேக்கிறேங்க்களா ? மலேசிய அரசாங்கத்தின் அழகு முகத்தில் தெரிந்து விடும் ,WAIT N SEE !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிங்கபூருக்கு ஒரு தீவை தாரை வார்த்ததுபோல்,
MH 370 விமானத்தை யாருக்கோ தாரை வார்த்து விட்டார்கள்.
அடுத்த வருஷம் காணாமல் போகவிருக்கும் விமானம்
யாருடையதாக இருக்கும் என்பதுதான் புரியாத புதிர்.
MAS-சா அல்லது NEW MAS-சா ?
இந்த சம்பவத்தால்,அமெரிக்கனே கண்டு பிடிக்க முடியவில்லை
என்னமோ செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பண்ணுகிறானாம்.