அனைத்துலக மனித உரிமைப் போராட்ட அமைப்பு ஒன்று, அரசாங்கம் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மீது “அரசியல்-நோக்கம் கொண்ட வழக்குகள் தொடுப்பதை” நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
“குற்றச்செயல் எனக் கருதப்பட முடியாத ஒன்றுக்காக அன்வார்மீது வழக்கு தொடுப்பதானது, ஓர் அரசியல் எதிரியை அகற்ற அரசாங்கம் எவ்வளவு தூரம் செல்லத் தயாராகவுள்ளது என்பதைக் காண்பிக்கிறது”, என மனித உரிமைக் கண்காணிப்பு அமைச்சின் ஆசியப் பகுதி துணை இயக்குனர் பில் ரோபர்ட்சன் கூறினார்.
“நீண்ட காலமாக நடக்கும் இவ்வரசியல் நாடகம், மலேசியாவின் மூத்த எதிரணித் தலைவரை அரசியல் போட்டியிலிருந்து அகற்றும் முயற்சி என்பது வெகு காலத்துக்கு முன்பே அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.
“மலேசிய அதிகாரிகள் அன்வாருக்கு எதிரான வழக்குகளைக் கைவிட வேண்டும். தவறினால் நாட்டின் குற்றவியல் நீதிமுறை கேலி செய்யப்படும்”, என்று ரோபர்ட்சன் கூறினார்.
நஜிப கொடி இல்ல இஸ்லாம் கற்று கொடுத்தா நல்லது இதுஹான் பின்னல் main கேஸ்
உள் நாட்டு விவகாரங்களில் ரோபட்சன் தலையிடுவதை
நிறுத்தி கொள்ளுங்கள் என்று குட்டி தலைவர்கள் நாளை அறிக்கை
விடுவார்கள் என்று நம்பலாம்.
நஜி… என்பவன் அநியாயமாக ஒரு நல்லவனை சிறை பிடிக்க …….. அழிவு காலாம் நெருங்கி விட்டது