யுத்தகாலத்துக்கு பின்னரான வன்முறைகள் தொடர்பான தீர்வு விடயங்களில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறிலங்காவுக்கான இணைப்பாளர் சுபை நண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறிலங்காவில் பல இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
சிறுபான்மையினருக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
அவ்வாறான விடயங்களை நீடிக்கவிடாமல் செய்து, நிரந்தர நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை சிறலங்காவுடன் இணைந்து செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.