இலங்கைக்கு விழுந்தது தலையில் பேரிடி: விசாரணை நிச்சயம் உண்டு என்றது ஐ.நா !

sssaநவனீதம் பிளை ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டதால், இலங்கை மீது இருந்து வந்த அழுத்தம் குறைய ஆரம்பித்துவிடும் என்று மகிந்தர் தப்புக் கணக்கு போட்டு வந்துள்ளார். ஆனால் நேற்றைய தின வெளியான அறிக்கை பெரும் அதிர்சியை தான் அள்ளித்தந்துள்ளது. இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில், மூன்று விஷேட குழுக்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இலங்கை, சிரியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவனீதம் பிள்ளையின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே ஹூசைன் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் மனித உரிமைகள் ஆணையகத்தால் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாகும்.

கடந்த மாதம் நான் பதவியேற்றபோது, பாரிய நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் எனது அலுவலகம் முன்னெடுத்துள்ள பணிகளை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் செயிட் அல் ஹூசைனின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெளிவாகிறது.

TAGS: