ஈழ இராச்சியத்தை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனைத் திட்டம் சமர்ப்பிப்பு?

eu_eelam_001ஈழ இராச்சியத்தினை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனைத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கியதனைத் தொடர்ந்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் அமைப்புக்களினால் இந்த யோசனைத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் தமிழர்களுக்கு தனியொரு நாட்டை உருவாக்கும் நோக்கில் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈழ இராச்சியத்தை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் அதற்கு முன்னதாகவே ஐரோப்பிய நாடாளுமன்றின் நிகழ்ச்சி நிரலில் ஈழ இராச்சியம் குறித்த யோசனையை உள்ளடக்குமாறு புலம்பெயர் புலி அதரவு தரப்பினர் கோரியுள்ளனர்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை உறுதி செய்யும் இன்டர்போல் மற்றும் யூரோபோல் பொலிஸாரின் அறிக்கைகளை புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த வழக்கு விசாரணைகளின் போது ஐரோப்பிய சட்டத்தரணிகள் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக சிங்கள பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

TAGS: