இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருக்கவே விரும்புவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
டிஐஎஸ்எஸ் என்ற மும்பாயில் உள்ள சமூக தரவுகள் அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது.
இதன்படி இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர் இந்தியாவில் தொடர்ந்தும் இருப்பதையே விரும்புகின்றனர்.
சுமார் 520 குடும்பங்களில் 23 சதவீதமான குடும்பங்களே இலங்கைக்கு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளன.
மன்னார் மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களே மீண்டும் திரும்பும் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். அதிலும் 42 வீதமானோர் ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தின் அனுசரணையில் திரும்ப விரும்புகின்றனர். 4 சதவீதத்தினர் மூன்றாம் நாடு ஒன்றுக்கு செல்ல விரும்புகின்றனர்.
இந்தியாவில் 111 முகாம்களில் 67ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர். ஏனையவர் முகாம்களுக்கு வெளியில் தங்கியுள்ளனர்
ஆண்ட பரம்பரை இன்று அகதிகள் என்ற சுமைகளை சுமக்கின்றதே ,நேசமண்ணில் ,அகதிகளாக இன்றும் வாழுகின்றதோ ,இல்லை வீழுகின்றதோ , வரும் காலம் அகதிகள் என்ற சுமைகள் அகன்று ,ஈழத்தின் ஆளுமை மிக்க மக்களாக வாழ, விதைக்கப்பட்ட தமிழனின் உயிர் என்ற விதைநெல் ,ஈழ விடுதலைக்கு வித்தாகட்டும் , தமிழன் வாழ்வில் அகதிகள் என்ற வார்த்தை அகலட்டும் , ஈழ விடுதலைக்கு வித்தாக , நித்தம் ஒரு பணி செய்வோம் , [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
ஆண்ட பரம்பரை மண்ணை பார்க்கவில்லை, விண்ணை பார்த்தார்கள் அதுதான் இந்த வீழ்ச்சிக்கு காரணம்! இனியாவது நல்லது நடக்கட்டும்!