இலங்கையில் சிங்களவர்-தமிழர்கள் பிரச்சினைக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலவுக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டதை கடுமையாக கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணி மாநில தலைமை செயற்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்குகின்றனர். இதனை மத்திய – மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறன. இதை கண்டிக்கிறோம்.
இலங்கை சிறையில் உள்ள சீன குற்றவாளிகளை விடுதலை செய்து இலங்கையின் கட்டுமான பணிகளுக்கு பணி அமர்த்துகின்றனர். இது தமிழர்களை அச்சுறுத்துகிறது.
போர் குற்றவாளி என விசாரணையில் உள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது பாரத ரத்னா விருது பெற்ற நேரு, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, காமராஜர் ஆகியோரை களங்கப்படுத்துவதுடன் பாரத ரத்னாவை களங்கப்படுத்துவதாக அமையும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இப்படியே கத்திக் கொண்டே காலத்தை ஓட்டுங்கள்.அங்கு சிங்களவன் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்கிறான்.உங்கள் நாட்டு நடுவண் அரசோ சிங்களவனுக்கு செய்யத் தகாத உதவியையும் தங்கு தடை இன்றி செய்து கொண்டேதான் இருக்கிறான்.தமிழர்களாகிய நீங்கள்தான் ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் அன்றிலிருந்து இன்றுவரை கேனத் தனமாக கத்திக்கொண்டிருக்கிரீர்கள்.அட செயலில் இறங்குங்கள் ஐயா.