ஓசை படாமல் மீண்டும் வந்த சீன நீர் மூழ்கி கப்பல்: இந்தியா அறிந்துகொண்டது எப்படி ?

csubmarineசமீபகாலமாக சீனா மற்றும் இலங்கை இடையேயான உறவுகள் வலுப்பெற்று வருகிறது. சீன அதிபர் இலங்கை சென்றவேளை அவர் பாதுகாப்புக் கருதி சீனா தனது அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை கொழும்புக்கு அனுப்பிவைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்பு வந்து சென்றது. இந்த விடையம் கூட இந்தியாவுக்கு பின்னர் தான் தெரியவந்தது. இதில் வேடிக்கையான விடையம் ஒன்றும் உள்ளது. அதாவது புலிகளின் ஆயுதக் கப்பல் எங்கே செல்கிறது என்று அவதானித்து அத்தகவல்களை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சொல்லிவந்த அமெரிக்கா கூட இந்த விடையத்தில் இந்தியாவின் காலை வாரிவிட்டது என்கிறார்கள். ஏன் எனில் சமீபத்தில் மேலும் ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ரகசியகாம இந்துமா சமுத்திரத்தில் வந்துசென்றுள்ளது.

இது தொடர்பான தகவலை அமெரிக்கா அறிந்துள்ளது. இருப்பினும் அதனை அது இந்தியாவுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை துல்லியமாக அறியும் திறனை அமெரிக்கா , சீனா, மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கொண்டுள்ளது. இவர்களிடம் தான் அதற்கான சாட்டலைட் உள்ளது. சீன நீர்மூழ்கியை கண்டறிந்த அமெரிக்கா அத்தகவலை இந்தியாவுக்கு சொல்லவில்லை என்பது ஆச்சரியமான விடையமே அல்ல. ஏன் எனில் , சீனாவில் தற்போது பல அமெரிக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. உதாரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகள் சீனாவில் தான் நடைபெற்று வருகிறது. இன் நிலையில் சீனாவை எதிரியாக்க அமெரிக்கா தயார் இல்லை என்பதே ஜதார்த்தம் ஆகும்.

இதன் காரணமாக அமெரிக்கா இந்த தகவலை வழங்கவில்லை. இருப்பினும் 3 வது நாடு ஒன்று இதுதொடர்பான தகவலை தற்போது இந்தியாவுக்கு வழங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியா கடும் அதிருப்த்தியடைந்துள்ளது என்று மேலும் அறியப்படுகிறது. இந்தியா இதுதொடர்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்துசெலவது தொடர்பாக கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

TAGS: