நீதிமன்றத்துக்கு வெளியில் சைபூல் சட்டைகளுக்கு தீ வைக்கப்பட்டது

fireபுத்ரா ஜெயாவில்  நீதி  மாளிகைக்கு வெளியில்  அன்வார்  இப்ராகிம்- ஆதரவாளர்கள்  சிலர்  முகம்மட்  சைபூல்  புஹாரி  பெயர்  பொறிக்கப்பட்ட இரண்டு  டி-சட்டைகளுக்குத்  தீ  வைத்த சம்பவமும்  அதன்  பின்னர்  நீதிமன்றத்தைச்  சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த  தடுப்புகளைமீறி  உள்ளே  செல்ல  முயன்றதும்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

உடனே  பிகேஆர்  இளைஞர்  பகுதியைச்  சேர்ந்த  தொண்டர்கள்  தலையிட்டு  அவர்களைத்  தடுத்து  நிறுத்தினர்.

அவர்கள் மறுத்து, “டத்தோஸ்ரீக்கு  ஆதரவு  தெரிவிக்க  வந்திருக்கிறோம்.  எங்களைப்  போகச்  சொல்லாதீர்கள்”, என்று  முரண்டு  பிடித்தார்கள்.

“நீங்கள்  யார்  பக்கம்?”, என்று  இன்னொருத்தர்  கூச்சல்  போட்டார். அவர்களை  அமைதிப்படுத்தித்  தொண்டர்கள்  அங்கிருந்து  அழைத்துச்  சென்றனர்.