மறைந்து போன மலையக மக்கள்!

koslanda_army_001இலங்கை வரலாற்றில் மலையாக மக்கள் ஒரு பாரிய சக்தி என்றே சொல்ல வேண்டும்.

தோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட கொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில்  தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்ததை பல மலையக ஆய்வாளர்களும்,  மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கிறார்கள்.

இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, அபாயப் பகுதியாக முன்னரேயே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் மக்கள் வசித்ததற்கு, அவர்களுக்கு வேறு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாமையே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் இந்திய வம்சாவளிகள் என்பதனால் அரசு இம் மக்களை இது வரைக்கும் சரியான முறையில் கையாளவில்லை என்ற பாரிய மறைமுகமான கேள்வி ஒன்று எழுகின்றது.

இந்த மக்களின் பிரச்சனை இன்று நேற்றல்ல இவர்கள் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது.

இந்த மக்களின் பாரிய மனை பிரச்சனைக்கு ஒரு தீர்வு எடுப்பதற்கு இன்னும் அரசுக்கு நேரம் கிடைக்க வில்லை என்பதே உண்மை.

காரணம் இவர்களை வைத்து அரசாங்கம் புழைப்பு நடத்துவது இந்த மக்களுக்கு தெரியாதான் காரணமே.

இன்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் ஏற்றுமதி துறையில் பாரிய பணத்தை சம்பாதிக்கும் ஒரே இடம் மலையகம்.

அரசுக்காக உழைத்து தேய்ந்து போன இம் மக்கள் ஒரு காலமும் தங்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை .

அது போன்று அரசாங்கமும் இவர்களை அடிமை போன்றே பார்த்து வந்துள்ளது .

தற்போது அரசியல்வாதிகள் கூறுகின்றனர் அவர்களுக்கு ஏற்கனவே வேறு இடத்துக்கு செல்லும் படி கூறியதாக கூறுகின்றனர் .

இன்று இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார சக்தியாக இருக்கும் மக்களுக்கு சரியான மனை ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டிய அரசு, அவர்களை கைவிட்டதன் விளைவே இது .

அது போன்று கல்வி வளர்சியிலும் இன்று நல்ல நிலையில் உள்ள மக்கள் ஏன் இதுவரைக்கும் மாயஜால அரசியல்வாதிகளை நம்புகின்றார்கள் என்பது புரியவில்லை .

இன்று மிருகங்களுக்கு இருக்கின்ற மதிப்பு கூட மனிதர்களுக்கு இல்லாமல் போகும் நாடாக இலங்கை மாறி வருகின்றது.

இனி வரும் காலங்களில் இந்த மக்கள் தாங்கள் ஏமாறும் மக்களாக இல்லாமல் சிந்திக்க கூடிய மக்களாக மாற வேண்டும் .

தற்போது அனர்த்தம் வந்ததும் ஓடி வரும் அமைசர்களை சரியான மரியாதை கொடுத்து திருப்பி அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் சிந்திக்க வைக்க வேண்டும் உழைத்து தேய்ந்து போன மக்களுக்கு சொந்த வீடு இல்லை.

உழைக்காமல் அரசியல்வாதி என சொல்லும் சொம்பரிகளுக்கு ஆடம்பர வீடு, அடுக்கு மாடி, வெளிநாட்டு வங்கிகளில் பணம், சொகுசு வாகனம், மனிதர்களை வித்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளே இது உங்களது குடும்பத்துக்கு நடந்தால் எப்படி இருக்கும் .

இவர்கள் உங்களை கடவுளாக மதிக்கின்றறாக்கள் ஆனால் நீங்கள் அவர்களை அவமதிக்கின்றீர்கள்.

இன்று நீங்கள் வெளிநாடுகளில் சென்று எம்மிடமும் பாரிய ஏற்றுமதி உள்ளது என்று பேசுவதற்கு இவர்களே காரணம்.

இது போன்ற சம்பவங்களுக்கு அரசியல்வாதிகளை விட இந்த மக்களின் தவறே காரணம் .

உங்களது கிராமங்களில் உங்களுக்கு உண்மையாக பணியாற்ற மனித நேயம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்தல் உங்களது கஷ்டம் அவர்களுக்கு புரியும்.

இன்று இந்த துன்பகரமான சம்பவம் இனி மேலும் நடக்காமல் இருக்க வேண்டுமாயின் உங்களது கோரிக்கைகள் சரிவரும் வரைக்கும் உங்களது தொழிலை புறக்கணியுங்கள்.

தமிழ் இனம் இன்னும் எதனை நாட்களுக்குத்தான் அடிமை வாழ்க்கை வாழ்வது.

கோயிலுடன் மண்ணில் புதையுண்ட குடியிருப்புக்கள்! பார்வையிட்டார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

koslanda_layan_001மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே மண்ணில் புதையுண்டுள்ளன.

7ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும், 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும், 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும், 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும், 11ஆம் இலக்க லயனில் 6வீடுகளும், 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக தகல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு,சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.

இவற்றில் தங்கியிருந்தவர்களும் மேலே குறிப்பிட்ட 66 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டமையால், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால், மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணியில் முப்படையினரும் இலங்கை விமானப்படையின் விசேட ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர், மருத்துவ குழு மற்றும் நோய்காவு வண்டிகளும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பணித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில், விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகெப்டர் மூலமாக ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரவிந்த குமாரும் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற அனா்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும் வழங்கினார்.

பாதிக்கப்பட்ட மக்களின் கருத்து……

இன்று காலை ஏழு மணியளவில் திடீரென பாரிய சத்தமொன்று கேட்டது. அதுவொரு வித்தியாசமான சத்தம். நான் ஓடினேன். எந்தப்பக்கம் என்று தெரியாமல் ஓடினேன்.

அப்படி ஓடும்போது மலை சரிந்து விழுந்தது. நான் அதில் புதையுண்டேன். என்னைக் காப்பாறிய சிலர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்’என்று கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் சிக்குண்டு உயிர்பிழைத்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தோட்டத் தொழிலாளியான ராதா (34 வயது) கூறுகையில், ‘திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் எனது இடுப்புப் பகுதி வரை மண் மூடிக்கொண்டது. எனது நான்கு பிள்ளைகளும் வேறு பக்கமொன்றில் இருந்தனர். தந்தையும் தாயும் கூட இருந்தனர். அவர்கள் தொடர்பில் தகவல் இல்லை. அவர்கள் புதையுண்டனரா என்பது பற்றி தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

புதையுண்டு மீட்கப்பட்டவர்களை லொறியொன்றில் வைத்தியசாலைக்கு ஏற்றி வந்த சாரதி இது தொடர்பில் கூறுகையில், வீதியொன்று தென்படவே இல்லை. மிகவும் கடினமான முறையில் மீட்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வந்தேன்.

சுமார் 128 லயன் அறைகளில் ஒன்றுகூட தற்போது தென்படுவதில்லை. கோயிலையும் காணவில்லை. அந்த லயன் அறைகளில் 300 அல்லது 400பேர் இருந்திருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

TAGS: