சிரியாவில் 70 இராணுவ அதிகாரிகளின் தலையைத் துண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தினந்தேறும் பல தலைத் துண்டிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர்.
தற்போது வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் (Idlib) நகரை கைப்பற்றுவதில் தீவிமாக உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மேலும் அங்கு புதிதாக திறக்கப்பட்ட ஆளுநர் மாளிகையை கைப்பற்ற முயன்றபோது, அங்கு அவர்களை எதிர்த்து போரிட்ட ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சிறை பிடித்தனர்.
இதனையடுத்து தங்களது முகாம்களுக்கு சுமார் 70 இராணுவ அதிகாரிகளை அழைத்து சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ், அவர்களின் தலையைத் தண்டிததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இட்லிப் நகரின் பெரும்பாலான பகுதிகள் தீவிரவாதிகளின் பிடியிலுள்ளதாகவும், அங்கு பல அரசு கட்டிடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. -http://world.lankasri.com





























இவர்கள் என்ன மிருக ஜென்மமா?.
அதைவிட மிக3 மோசமானவர்கள். புரிந்துகொள்ள மிக2 சிரமமான ஒன்று. இந்தக் கொடூர மிருகத்தனத்தையும் ஆதரிக்க சிலர் உள்ளனர். இல்லாத சுவர்க்கம் செல்ல மனிதன் அறியாமையில் என்ன2வோ கொடுரங்கள் செய்ய வேண்டி உள்ளதே..!!
நாராயண நாராயண.
தேனீ தயவு செய்து மிருகங்களை இந்த ஈன வெறி பிடித்த ஜென்மங்களுடன் ஒப்பிடாதீர்கள்.மிருகங்கள் இந்த வெறி பிடித்த மதவாதிகள் போல் கொலை செய்வதில்லை. மிருகங்கள் எவ்வளவோ மேல். இவன்கள் எல்லாம் அறிவில்லா ஈன ஜென்மங்கள்.- அதுவும் ஆண்டவனின் பெயரில் — முஸ்லிம்கள் எத்தனை பேர் இதை கண்டித்திருக்கின்றனர்?
மன்னிக்கவும். இவர்கள் மிருக ஜென்மங்கள் இல்லை என்பதை ஒப்புக் கொள்கின்றேன். மிருகங்கள் இவர்களை விட மேன்மையானவை என்பதையும் ஒப்புக் கொள்கின்றேன். இதைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் அருகில் இருக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கு மனிதாபிமானம் இல்லையோ!. “மதம்” தலைக்கேறி மமதையில் வாழும் ஈன ஜென்மங்களே இவர்கள்.