காணாமல் போனவர்களின் தற்போதை நிலைமை உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான, அவர்களின் உறவினர்களது உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்காக காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்களும், ஆள் மற்றும் நிதி பலமும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக குறித்த ஆணைக்குழு சுதந்திரமாக செயற்பட இடமளிக்க வேண்டும்.
அத்துடன் ஆணைக்குழுவின் முன்னாள் சாட்சி வழங்குகின்றவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் குழு அறிவுறுத்தியுள்ளது.