யுத்த காலத்தில் வடக்கில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை விட தற்போது வட மாகாணத்தில் அதிகம் – ராயப்பு ஜோசப்

Rayappu Josephவடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்துக்குச் செல்லும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

வெளிநாட்டவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடானது, ஆபத்தான நிலைமைக்கு இட்டுச் செல்லும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையானது, யுத்த காலத்தில் வடக்கில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை விட அதிகமாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஆயர், இதனால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என அவர் குறிப்ப்பிட்டுள்ளார்.

TAGS: