ஈராக்கில் கடந்த மூன்று நாட்களில் 322 பழங்குடியினரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், இப்போது அன்பார் என்ற பகுதியில் உள்ள பழங்குடியின மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இந்த பகுதியை கைப்பற்றிய கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 50 பேரை கொன்ற தீவிரவாதிகள், தற்போது 272 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் 322 பழங்குடின மக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், இதில் பெரும்பாலான சடலங்கள் ஏரி ஒன்றில் மிதப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பழங்குடியின தலைவர் ஷேக் நையின் கூறுகையில், ஈராக் அரசு எங்களை காப்பாற்ற தவறிவிட்டது. தீவிரவாதிகளை எதிர்த்து போராட நாங்கள் அரசிடம் ஆயுதம் கேட்டோம். ஆனால் அரசு தர மறுத்துவிட்டதால் எங்கள் மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகளிடம் சிக்கி இருக்கும் பல நூறு பேர் கதி என்ன என்பது தெரியாததால், சர்வதேச சமூகம் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். -http://world.lankasri.com