எல்லைக்கிராம ஆக்கிரமிப்பு தொடர்கின்றது! தடுக்க நடவடிக்கையில்லை – அன்ரனி ஜெகநாதன்!!

antony_jeganathanமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராம்ஙகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்கள் எலி பொந்தெடுத்தாற் போல் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. அதனைத்தடுப்பதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுவது மக்களை மேலும் பாதிக்கின்றதென முல்லைத்தீவு மாவட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் பிரதி அவைத் தலைவருமான அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அரச தரப்பினர்களினால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற அதே வேளையில் இராணுவத்தினரால் தொடர்ந்தும் பல்வேறு இடங்களிலும் பல வழிகளிலும் அபகரிக்கப்பட்டும் வருகின்றது. இதில் குறிப்பாக முல்லை மாவட்டத்தின் நிலை தொடர்நந்தும் மிக மோசமாகவே காணப்படுகின்றது.

அதாவது மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் தொடர்ச்சியான சிங்களக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதே வேளையில் முஸ்லிம் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இங்கு சில குடும்பங்கள குடும்பங்களாக வந்தவர்கள் தற்போது குடியேற்றங்களாக குடியேற்றப்பட்டிருக்கின்றனர். இதற்கு அரச அமைச்சர்களும் அரச படைகளும் அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்களை மேலம் மேலும் அங்கு குடியேற்றும் முயற்சிகளிலேயே ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பரம்பரை பரம்பரையாக அவர்கள் வாழ்ந்த இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனை தற்போது சொந்தம் கொண்டாடும் அதே வேளையில் அவற்றை உரிமையாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக எலி பொத்தெடுத்தாற் போன்றே அங்கு இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அமைகின்றது. இந்;த நிலை தொடருமாயின் ஏற்கனவே பறிபோய் இருக்கின்ற எல்லைக் கிராமங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் சிங்கள மக்களின் வாழ்விடங்களாகவும் அவர்களின் சொந்த நிலங்களாகவும் மாற்றம் பெற்று எல்லைக்கிராமங்கள் அனைத்தும் பறிபோய் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏனைய நிலங்களும் ஆக்கிரமிக்கப்படக் கூடிய ஆபத்துக்களும் இருக்கின்றது.

இந்நிலையில் இங்கு எல்லைக் கிராமங்கள் முழ வீச்சில் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற அதே வேளையில் ஏனைய இடங்களிலும் பல்வேறு நிலங்கள் திரை மறைவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துமென்றும் அன்ரனி nஐகநாதன் மேலும் தெரிவித்தார்.

TAGS: