போலியான செயற்பாடுகள் மூலம் நல்லிணக்கத்தை அடைய முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

sambanthan press meetபோலியான செயற்பாடுகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல்கள் குறித்த இலக்குகளை அடைய முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் சிறிலங்காவுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனும், மகிந்தராஜபக்ஷவும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இந்த அறிக்கையில் சிறிலங்காவின் பொறுப்புக்களை அறிந்து செயற்படவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்பு கொள்வதாக சிறிலங்கா உறுதியளித்திருந்தது.

ஆனால் இந்த செயற்பாடுகள் நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதனை அரசாங்கத்தின் போலியான செயற்பாடுகளால் அடைய முடியாது.

எனவே நாட்டின் நீண்டகால நலனை கருதி, சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல்கள் தொடர்பான தங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: