ஐ.நா விசாரணைகளில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டவர்கள்?

un06இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டவர்கள் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான இந்த விசாரணை நடத்தப்படுகின்றது.

சாட்சியமளித்தவர்கள் வன்னிப் போரின் போது இலங்கையில் இருக்கவில்லை.

இதுவரையில் 6000ற்கும் மேற்பட்டவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர்.

சாட்சியங்கள் ஏற்றுக் கொள்வது தொடர்பான கால வரையறைகள் அகற்றப்பட்டுள்ளன.

எந்த நேரத்திலும் விசாரணைகள் தொடர்பில் சாட்சியமளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சாட்சியமளித்த அதிகமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகளுமாகும் என சிங்களப் பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை> சாட்சியமளிப்போரின் இரகசியத்தன்மை பேணப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உறுதியளித்துள்ள நிலையில், குறித்த பத்திரிகை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் போலி சாட்சியங்கள் அளிக்கப்படுவதாக குற்றம் சுமத்துகின்றது என்பதனை நிரூபிக்கத் தவறியுள்ளது.

TAGS: