கால தாமதமாக வழங்கப்படுகின்ற முறைபாடுகள் நிராகரிக்கப்பட மாட்டாது என்று, சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்குழு அறிவித்துள்ளமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இந்த விசாரணைக்கான சாட்சிகளை வழங்குவதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையின் அடிப்படையிலேயே யுத்தகுற்ற விசாரணைக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு காலதாமதமாக வழங்கப்படுகின்ற முறைபாடுகள் மற்றும் சாட்சிகளை நிராகரிப்பதில்லை என்று, குறித்த விசாரணை குழு முன்னதாக அறிவித்திருக்கவில்லை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து அரசாங்கம் அதிருச்சிக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.