ரித்துவான் தீ: ஹூடுட் சட்டம் “பலாத்காரமாக” அமல்படுத்தப்பட வேண்டும்

இஸ்லாமிய ஹூடுட் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரே வழி அச்சட்டத்தை “பலாத்காரமாக” அமல்படுத்துவதுதான் என்று மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் ரித்துவான் தீ அப்துல்லா இன்று கூறினார்.

“இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு (இஸ்லாம் குறித்து) போதிப்பது பலவந்தத்தின் மூலமாக மட்டுமே முடியும்”, என்று அந்த இணைப் பேராசிரியர் மலாய் மொழி நாளிதழ் சினார் ஹரியான் ஏற்பாடு செய்திருந்த “ஹூடுட்: அதன் இக்கட்டான நிலை மற்றும் அமல்படுத்தல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் இன்று ஷா அலாமில் கூறினார்.

இஸ்லாமிய சட்டம் குறித்த முஸ்லிம் அல்லாதவர்களின் “எதிர்மறையான மனப்பான்மை” அச்சட்டத்தின் அமலாக்கத்தை அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பது சாத்தியமில்லை என்பதால் இது தேவைப்படுகிறது என்று தமது கருத்துக்கு விளக்கம் அளித்தார்.

TAGS: