தமிழர் பிரச்சினையை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளருக்கு ஆதரவு!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு

tna_logoதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளர் ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 8வது சிரார்த்த தின நிகழ்வுகள் நேற்று நடைபெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றல், காணி சுவீகரிப்பை நிறுத்தல், வலிகாமம் வடக்கு – சம்பூர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதிகளை மீளக்குடியேற்றல் உட்பட்ட விடயங்களில் உறுதியை வழங்கக்கூடிய பொதுவேட்பாளர் ஒருவருக்கே கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று சுரேஸ் குறிப்பிட்டார்.

அந்த வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவாக, ரணில் விக்கிரமசிங்கவாக அல்லது கரு ஜெயசூரியவாக இருக்கலாம். எவரானாலும் தமிழ் மக்களுக்கு இந்த உறுதிமொழியை வழங்கவேண்டும் என்றும் சுரேஸ் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியதாகவும் சுரேஸ் கூறினார்.

TAGS: