ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்த 5 சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கும், பிற பெண்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் உள்ள சிங்ஜர் பகுதியில் யசிதி மக்கள் வாழும் கிராமங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தாக்கியதில், ஆயிரக்கணக்கான யாசிதி மக்கள் அருகில் உள்ள மலைகளுக்கு தப்பியோடிவிட்டனர்.
தீவிரவாதிகள் 5 ஆயிரம் யசிதி மக்களை கடத்திச் சென்றனர். அதில் பலர் பெண்கள் மற்றும் சிறுமிகள். இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 5 சிறுமிகள் மற்றும் பெண்கள் தப்பி வந்துள்ளனர்.
இதில் ஒரு பெண்மணி கூறியதாவது, நான் என் பெற்றோர், 5 சகோதரிகள் மற்றும் சகோதரியின் மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது தீவிரவாதிகள் எங்களின் காரை வழிமறித்து எங்களை கடத்திச் சென்று நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.
அங்கு அவர்கள் ஆண்கள் மற்றும் சிறுவர்களிடம் இருந்து பெண்களை பிரித்தனர். பின்னர் திருமணமாகாத பெண்கள் மற்றும் வயதானவர்களை பிரித்து அழைத்துச் சென்றனர்.
நான் போக மறுத்து என் தாயின் கையை பிடித்து அழுதேன். தீவிரவாதிகள் என்னை அடித்து என் தலையில் துப்பாக்கியை வைத்தனர்.
இதை பார்த்த என் தாய் அவர்களுடன் செல் இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவார்கள் என்றார். அவர்கள் என்னை, என் 19 வயது அக்கா மற்றும் 12 சிறுமிகளுடன் சேர்த்து 3 பேருந்துகளில் ஏற்றி மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர்.
மொசுல் நகரில் ஒரு வீட்டில் நாங்கள் 9 நாட்கள் இருந்தோம். தீவிரவாதிகள் வந்து அவர்களுக்கு பிடித்த பெண்ணை, சிறுமியை தெரிவு செய்வார்கள். உயர் பதவியில் இருக்கும் தீவிரவாதி என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை தெரிவு செய்து அழைத்துச் செல்வார்கள்.
ஒரு தாடி வைத்த தீவிரவாதி வந்து என்னை அழைத்தான். நான் வர மறுத்ததும் என் அக்காவின் கழுத்தில் கத்தியை வைத்தனர். அதனால் சென்றேன், அது தான் என் சகோதரிகளை நான் கடைசியாக பார்த்தது.
என்னை 8 இடங்களுக்கு மாற்றி பின்னர் சிரியாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிரவாதிகள் பெண்களை ஏலத்தில் எடுத்தனர்.
அங்கு உள்ள ஒரு வெள்ளை வீட்டில் எங்களை தங்க வைத்தனர். அந்த வீட்டில் பெண்களை ஆடைகளை அவிழ்த்துவிட்டு குளிக்கச் செய்து அவர்கள் அளித்த உடையை அணிய வைத்தனர்.
வார இறுதியில் எங்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ளப்போவதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
அடுத்த அறையில் இருந்த பெண்களை செக்ஸுக்காக அவ்வப்போது இழுத்துச் சென்றனர். பல தீவிரவாதிகளால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் அது பற்றி எங்களிடம் தெரிவித்தனர்.
நானும் சிலரும் தப்பித்து ஓடினோம், ஆனால் எங்களை பிடித்து வந்து அடைத்து வைத்துவிட்டனர். கட்டாய திருமணம் செய்ய நான் தயாராக இல்லை, இதையடுத்து மீண்டும் தப்பிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றேன் என்று கூறியுள்ளார். -http://world.lankasri.com
அமெரிக்கரின் தலையை துண்டித்த ஐஎஸ்ஐஎஸ்: கொடூர செயல் ஆரம்பம்
சிரியாவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்துவந்த பீட்டர் காஸிக் என்ற அமெரிக்கரின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் துண்டித்து காணொளி ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேரறுக்க அந்நாட்டில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்துவருகின்றது.
இதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவ்வப்போது அமெரிக்காவை சேர்ந்தவர்களை பிடித்துச் செல்லும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதோடு அவர்களின் தலையை துண்டித்து காணொளியையும் வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், தற்போது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் தொண்டூழியம் செய்வதற்காக பெய்ருட் நகரில் தங்கியிருந்த பீட்டர் காஸிக் என்ற அமெரிக்கரின் தலையையும் துண்டித்து, அந்த காணொளியை வெள்யிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாம் மார்கத்தில் இதுவெல்லாம் போதிக்கவில்லையே? உலகம் போற்றும் உன்னத மார்க்கம் ஏன் இப்படி திசை மாறி தீவரதிகள் மார்க்கம் என்று போல் காட்சி கொடுக்கிறேதே . தமிழ் ஈழம் தீவர வாதிகள் என்று மடையர்கள் பட்டம் கட்டினார்கள் , ஆனால் அவர்கள் சிறுமிகளையும் பெண்களுயும் இப்படி கொடுமை செய்யவில்லை.
என்னதான் கேவலங்கள் நடந்தாலும் அவர்களை அடுத்தவர் பெண்ணை வேசி போல பாவித்தாலும் அவர்கள் மதத்தை விட்டுகொடுபதில்லை . மதம் மாற நினைப்பதும் இல்லை . ஆனால் இந்த பூமியில் பிறந்து உடம்பு வளைத்து வேலை செய்ய சோம்பேறி தனம் படுபவர்கள் சாதாரணமாக மதம் மாறு கின்றனர்
இந்த கொடூரர்களின் சுயரூபம் தற்பொழுது வெட்டவெளிச்சம் ஆயிடுச்சு! இவர்களை இனியும் உலக மக்கள் விட்டுவைத்தால் உலகத்திற்கே பேரழிவை உண்டுபண்ணி விடுவார்கள்! இன்னும் உலக நாடுகள் அசட்டையாக இந்த கொடூர மனநோயாளிகளின் விசயத்தில் இருப்பதை நினைத்தால் கவலையாக உள்ளது!
செத்து தொலைங்கடா. சதை தின்னும் பிண்டங்களா.