தமிழீழ மாவீரர் தினம் இம்மாதம் 27ம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் வீதிகள், பொது இடங்கள் அனைத்திலும் படையினர் நிலை நிறுத்தப்பட்டிருப்பதுடன், நேற்றைய தினம் தொடக்கம் விசேட அதிரடிப் படையினரின் சோதனை நடவடிக்கைகளும் உச்சக்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டின் பின்னர் வடமாகாணத்தில் நவம்பர் மாதம் முழுவதும் அதியுச்ச கெடுபிடிகள் வழக்கமாக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இம்மாதம் தொடர்ச்சியாக ச கல இடங்களும் படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் அவதானிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று முதல் குடாநாட்டில் அதியுச்சமாக வீதிகள், பொது இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு படையினர் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
கடந்த வருடத்தைப் போன்று குடாநாட்டின் பல ஆலயங்களுக்குச் சென்ற படையினர் 27ம் திகதி நடைபெறவிருக்கும் அனைத்து பூஜை வழிபாடுகளையும்,நிறுத்தவேண்டும். என கூறியிருக்கின்றனர்.
மேலும் இளைஞர்கள் அதிகம் கூடி நிற்கும் ச னசமூக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் 27ம் திகதி எவரும் நிற்க கூடாது எ ன புலானாய்வாளர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகம், மற்றும் மாணவர் விடுதி ஆகியவற்றை சுற்றி துவிச்சக்கர வண்டிகளில் பெருமளவு படை யினர் உதிரிகளாக களமிறக்கப்பட்டிருப்பதுடன், யாழ்.பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, பலாலி வீதி, சிவனம்மன்கோவிலடி போன்றவற்றிலும் படையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள துடன், ஆங்காங்கே விசேட அதிரடிப்படையினரின்,சோதனை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் 27ம் திகதி இத் தகைய கெடுபிடிகள் இன்னமும் அதிகரிக்கப்படலாம் என மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளமையினைக் காண முடிகின்றது. -http://www.tamilwin.com