தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
போரினால் பாதிக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம செலுத்தத் தவறியுள்ளது.
முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களின் அபிவிருத்தியை உறுதி செய்யவும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார். -http://www.tamilwin.com