அண்மையில் ஜோகூர், பெங்கேராங்கில் தடுப்புக்காவலில் இருந்தபோது இறந்த 25-வயது ஆடவரின் மரணத்தில் சந்தேகம் கொள்ள எதுவுமில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது.
அது ஒரு திடீர் மரணம் என ஜோகூர் சிஐடி தலைவர் ஹஸ்னான் ஹசான் கூறினார்.
சைட் முகம்மட் அஸ்லான் சைட் முகம்மட் நூர், சுங்கை ரெங்கிட் போலீஸ் நிலையத்திலிருந்து கோத்தா திங்கி போலீஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது இறந்தார்.
அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு பண்டார் பெனாவார் மருந்தகத்துக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டதாகவும் போலீஸ் கூறிற்று.
அவரின் குடும்பத்தார் அதை நம்பவில்லை. வேலையில்லாதிருந்த அவரின் உடலில் காயங்களும் “குழிகுழியாக துளைகளும்” காணப்பட்டதாக அவரின் குடும்பத்தார் நேற்று கூறிக்கொண்டனர்.
காவல் துறைக்கு இதில் எல்லாம் சந்தேகம் இருக்காது– காரணம் இதற்க்கு காரணமே இவன் கள் தானே. தன்னைத்தானே எப்படி குற்றம் கூற முடியும்? உண்மையான OMBUDSMAN இருந்தால் ஒழிய இது போன்ற ஈன செயல்கள் தொடரும்.
வழக்கம்போல ….தான் வேதம் ஓதுகிறது.இது எதிர்பார்க்கப்பட்ட பதில்தான்.
குகன் கேஸ் மாதிரி தெரியுது,இந்த இறப்பில் mk shanthi .kumki
இந்த மூவருக்கும் தொடர்பில்லை.
அட ஆசாமி உமக்கும் காமடி நல்லா வருதே? கோலிவுட் போனால் வடிவேல் இடத்தை பிடிக்கலாம்.
அது எப்படி குற்றவாளி எல்லோருக்கும் மூட்சி திணறல் ஏற்படுகிறது.