அரச சார்பற்ற நிறுனத் தலைவர் ஒருவர் அல் ஹுசெய்னுடன் இரகசிய பேச்சுவார்த்தை

zeid_zeidஇலங்கையின் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் தலைவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.

போர்க் குற்றச் செயல்களில் இலங்கை ஈடுபட்டதாக விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்,  சனல்4  ஊடகவியலாளர் கெலும் மக்ரே உள்ளிட்ட பலர் இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் போலியான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், ஜெனீவாவில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய அரச சார்பற்ற நிறுவனத் தலைவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. -http://www.tamilwin.com

TAGS: