இண்டராப் இன்று தோற்று நிற்க காரணம் அரசியல் இலக்கு இல்லாத மின்மினி பூச்சித்தனம் என்பேன். உதயக்குமார் சொன்னது போல பாமர மக்களின் போராட்டம் வீதியோடு நின்றது. பயன் படுத்திக்கொண்ட சில உயர் வர்க்க ஆசாமிகள் இன்றும் பிரிவினையில் சந்தர்ப்ப அரசியல் ஆளுகின்றனர். உதாரணதிற்கு நல்ல கருப்பன் , தநேந்திரனை சொல்லலாம் . உலக இனப்போராட்ட அரங்கில் அரசியலற்ற குருவி ஊர் போய் சேராது என்ற கதிதான். ஆனால் அரசியலில் விடியல் புழுக்களை பிடிக்கும் குருவிகள் கெட்டிக்கார கழுகுகள் எனலாம்.
மக்கள் சக்தி பத்தரிகையில் “நேரமாச்சி” என்ற தொடரில் என் இந்த அரசியல் அவசர ஆதங்கத்தை எழுதி இருந்தேன். PR குறிப்பா PKR நம்மை ஏமாற்றி விடும் என்ற அபாயத்தை மறைமுகமாக எழுதியும் இந்த இன எதிரணி தலைவர்கள் உணரவில்லை. அல்லது அவரவர் அரசியல் பதவிக்கு பதுங்கினர் என்பதுதான் உண்மை.
அந்த மீதமுள்ள நால்வரால் இண்ட்ராப் தோல்வி என்பதை எங்களால் ஏற்க முடியாது காரணம். கூட்டணியாலும் முன்னணியாலும் ஊர் இரண்டு பட்டதால் அரசியல் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பதை நஜிப்பும் அனவரும் உறுதி படுத்தினர். அதிலே குழம்பிய இரு குட்டைகளில் மீன் பிடிக்க நினைத்து இரு பெரும் கட்சிகளிடம் அதிக இடங்களை கேட்டு பேரம் பேசிய விதத்தை மக்கள் வெறுத்தனர்.அதில் கடசியில் BN னுடன் சோரம் போனது …மாற்று அரசியலை நோக்கி இருந்த எங்கள் வேகத்தை மழுங்கசசெய்து அடிப்படைக்கே ஆபத்தை உண்டுபண்ணியதுதான் மோசமான முடிவாகும்.
மலேசிய பாமர இந்தியர்கள் /தமிழர்களை பொறுத்தவரை இண்டராப் தனித்து போட்டி போட்டு இருந்தால் நடந்து முடிந்த
13 பொதுத்தேர்த்தல் வழி BN னுக்கும் PR ருக்கும் ஒரு நல்ல பாடத்தை தந்து நம் அரசியல் வலுவை மதிக்கப்பட செய்து இருக்கலாம். ஜெயிக்காமல் போனாலும் உடச்சி ஊனமாக்கி இருக்கலாம். அச்சமாவது மிஞ்சி இருக்கும்.இப்போது விக்கி நிற்கும் தொங்கு நிலை இந்த சமுதாயத்துக்கு ஏற்பட்டு இருக்காது. நமது மக்களை ஏசுவதில் ஏக்கம்தான் மிச்சம். அவர்கள் தேவைகளின் அடிமைகள். வாழ்வாதாரத்தின் அவசியங்கள். இது இன்னும் தொடரும்.காரணம் நமக்கு தெளிவான தலைவன் இல்லாமையை இவர்கள் உணர்ந்தவர்கள்!
பத்திரிக்கைகளின் தளர்ச்சி தன செய்திகளால் இனிமேல் இண்டராப் நிலை குறிப்பா அரசியலற்ற நிலையால் இந்தியர்கள் BN பக்கம் அல்லது PR பக்கம் என்ற இரண்டும் கெட்டான் நிலையில் அரசியல் “மரியாதையை” என்பதை இழந்த இனமாக வாழ நேரிடும்.
இதனால்தான் 14 வது பொதுததேர்தலுக்கு இன மான அரசியல் துணிச்சல் மிகு உணர்வுள்ள ஒரு இயக்கம் வேண்டும். அல்லது இந்தியன் சார்பு கட்சிகள் முழுமையாக கூட்டணியில் அல்லது முன்னணியில் இணைத்தால் மட்டுமே சமுதாயத்தின் அடுத்த கட்ட துடுப்பை அரசியல் நகர்த்த முடியும்.
காலமில்லை ஆக…வெளிப்படையாக உரிமையாக பேசுவோம். மலேசிய இந்தியர்களை /தமிழர்களை பொறுத்தமட்டில் இண்டராப் முடிந்தது…..PKR இல் இந்தியர் தலைவர்கள் யாருமில்ல …ம இ கா தொட்டில் ஆடுகிறது…. DAP யில் யாரையும் காணோம்….ஜனநாயக
ம இ கா கூஜா …மக்கள் சக்தி இதுவரை ஒன்னும் செய்யா ஜடம்…..IPF நாலு நம்பர் குலுக்கு ……மக்கள் நீதி ஒரு இருண்ட அறை…..PPP புதிய ஏப்பத்தில் இந்தியர் என்கிறது….இப்படி சலித்து பார்க்கையில் மண்ணும் மணலுமாய் மலேசிய இந்தியர்களின் அரசியல் நிலை சிக்குகிறது.
மாற்றம் வேண்டும் என்று முக்கி முக்கி குதித்த சமுதாய அரசியல் தலைவர்கள் இப்போது புருவத்தை சொரிந்து இந்த சமுதாயத்தை அடுத்த ஆஸ்ரம மரத்தடியில் வைக்க யோசிக்கின்றனர் என்ற பயம் வந்துள்ளது.
இதற்கு நமக்கு அரசியல் தீர்வுதான் என்ன? நமக்கு யார் அந்த அரசியல் “ஒத்த” singal தலைவர் ? அவரை கண்டு பிடிக்க மேலே சொன்னவர்கள் கை கோர்பார்களா? இவர்களில் யார்தான் சிதறிக்கிடக்கும் குண்டு மணிகளை கட்டுவது ? 14 வது பொதுத்துத்த்தேர்தல் வர 39 மாதங்கள் உண்டாம். யாரை எங்கு வைப்பது என்று யாருக்கும் புரியலே இங்கு …. என்ற தவிப்புதான் இந்த அலசலின் பார்வை.
சமுதாய முக்கியத்துவம் பேசும் இவர்கள், ஏன் இணைவதில்லை?
பொருளாதரம் வேண்டும் / மக்கள் தொகை வேண்டு/ தமிழ் மொழி வேண்டும்/ நமது கலை காலச்சரம் வேண்டும் என்றெல்லாம் மாநாடு கூட்டும் இவர்கள் ஏன் தனி தலைமைத்துவ திறனாய்வு மாநாடு கூட்டுவதில்லை? இவர்கள் ஒத்து போவதில்லை ஆனால் மக்கள் ஒற்றுமையாக இருங்கள் என்று கூப்பாடு வாசிப்பதில் என்ன நியாயம்?
தனி தனியே சந்திக்கும் போதெல்லாம் நாகரீகமாக கை குலுக்கி பேசிக்கொள்ளும் இவர்கள், கட்சி என்றதும் கடிக்கும் துரோகம்தான் என்ன? டதோ பட்டங்களும், செனட்டர் பதவிகளும் , வணிக சுரங்கங்களும் போதுமென்றால் அப்படி உச்சத்தில் போய் நின்று துயிலும் எந்த வெற்றியாளரையும் காண முடியவில்லயே ?
அரசியலே தெரியாத ஒருவர் சென்ற வாரம் இந்துஸ் அறவாரியம் அமைத்து அரசிடம் 50 லட்சம் வாங்கி விட்டார். இவர்தான் மைக்காவையும் வாங்கினார்! மைக்க லாபத்தை அறவாரியத்தில் போடுவேன் என்றார். அதை யாரும் கேக்க வில்லை. ராமசாமி தமிழ் மாநாட்டில் ஏவினார் . என்ன கேக்க வேண்டுமோ அதை கேக்க வில்லை…..தமிழர்களிடம் தலைமைத்துவம் இல்லை என்கிறார்.அடையாளத்தை தேடி என்கிறார். இலக்கிய ஞானோதயம் செய்வது தலைமைத்துவமா ? தரமிலையா? இதுவரை சொல்லாத அடையாளங்களா?
யானைகள் புகும் இடம் தெரியாமல் எலிகள் வேட்டைக்கு வலை பின்னும் இன்றைய மலேசிய இந்தியர் அரசியல் தலைமைத்துவத்தில் ஒருத்தரையும் காணோம் என்பதுதான் வெறிச்சோடிய விடை. பிரபாகரன் போல சிந்திக்காமல் பிரபாகரனை பேசி புண்ணியமில்லை விடியலுக்கு வெளிச்சம் தர ஒரு புதிய அரசியல் சூரியன் உதிக்க வேண்டும் என்பது நமது ஆசை. முதலில் யார்? பிறகு எப்படி என்று சிந்திக்கலாம் …. இது நடக்க இன்றைய பழசுகள் பவித்தரமாய் ஒதுக்கள் பட வேண்டும். இந்த இடிக்கும் மின்னலுக்கும் இவர்கள் தயார் என்றால் முதல் படி கிளியர் ! அடுத்த
புயலை சந்திக்க இளையோர் இணைய வேண்டும். யார் அந்த விவேங்கை ?
ஆவலுடன், உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம் மலேசியா.
-Pon Rangan
[email protected]
சமுதாய உணர்வு , விவேகம் உள்ளவர் உதயா.!
2007 இல், சிறு துளி, பெரு வெள்ளமாக சக்தி கண்டோம் ,
இனி சுனாமியாக மாற்றம் காண வேண்டும் ..
கடந்த காலங்களில் இந்தியர்களின் ஓட்டு பல தொகுதிகளில் வெற்றி/தோல்வி தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் நிலையில் இருந்தது ….ஆனால் 13வது பொது தேர்தலில் அந்த உரிமையும் சீனர்களின் கைகளுக்கு மாறிவிட்டது. 13வது பொது தேர்தலில் சீனர்களின் விழிப்புணர்வும் பங்களிப்பும் மலேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த உதவியது……இந்த விழிப்புணர்வு கூட, நாம் இந்தியர்கள் 12வது பொது தேர்தலில் ஹிண்ட்ராப் மூலமாக அரசாங்கத்திற்கு காட்டிய ஒரு அதிரடி …..ஆனால் ஒற்றுமை இல்லாத இந்திய சமூகம் அந்த அதிரடியையும் தொடராமல் பறிகொடுத்து இப்பொழுது பரிதாமாக……. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டு….. ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கை ஏந்தி நிற்கிறது……மேலும் சிறு துளியாக இருக்கும் மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கை ….பல அரசியல், மொழி, இனம், ஜாதி என்று சுக்கு நூறாக பிரிந்து அல்லல் படுகிறது ….இதற்க்கு முற்று புள்ளி வைக்க இந்திய அரசியல் தலைவர்கள் , சமுகம் தலைவர்கள், அரசு சேரா அமைப்புகள் எல்லாம் ஒரு குடையின் கீழ் முன் வர வேண்டும்…..????சாத்தியமாகுமா…??? 14வது தேர்தலில் கலக்குவோமா….???? ஹிண்ட்ராப் மூலமாக கற்றுகொண்ட அனுபவங்களை ஒற்றுமையாக செயல் படுத்தினால்……நாம் இந்தியர்களும் ஒரு மாநிலத்தை கூட ஆட்சி புரிய முடியும் ….!!!
உண்மை ..
நமக்கு ஒருனள்ளதலைவன் இதுவரை தோன்றவில்லை ! எப்போது பிரப்பன் என்றும்
தோன்றவில்லை ! 56 வருடங்களாக சுயநலவாதிகளை அரசியலிலே பார்த்து வந்துள்ளோம் . பொன்.ரெங்கன் இப்போதுதான் விவேகமான கருத்துக்களை சொல்லிருக்கிறார் .நன்றி. சிந்திக்கவேண்டிய கருத்து!! சுரண்டல்பெர்வழிகளையும்
வெளிநாட்டில் சுற்றிக்கொண்டு அம்நோகாரர்களை பணக்காரர்களாக்கும் பக்கா
குள்ளனரியையும் ஒதுக்கவேண்டும் !! புதிய அரசியல் உலகம் படைப்போம் !!!
இம்முறை BN அமோக வெற்றி பெரும் ,இந்தியகளின் ஒட்டு BN னுக்கே
சொல்லப்போனால்..பி என் தான் ஒரு நிலையான அரசாங்கத்தை தர முடியும்..எதிர்கட்சிகள் அனைத்துமே அவரவர் சுயனலதுக்க்காகவே இயங்குகின்றன.
shanti , MK , உங்களின் அரசியல் கணிப்புக்கு மிக்க நன்றி. எந்த அரசியல் கட்சியோ, அல்லது அரசியல்வாதியோ சுயநலமின்றி செயல் பட்டுள்ளதா?. மீண்டும் காமராஜரையோ, மகாத்மா காந்தியையோ நாம் காண்போமா? தாங்கள் இருவரும் பி என் இடமிருந்து ஓரிரு நனமைகளை அடைந்திருக்கலாம். அப்படியானால் உங்களுக்கு என் பாராட்டுக்கள். தகுதி உடைய நம்மவர்கள் தகுதியல்லாத அவர்களிடம் தோல்வி அடைந்தோர் என்னிள்ளடகா. நாம் கேட்பது நமது தகுதிக்கும் திறமைக்கும் மேல் வசதியல்ல. இங்கு போர்த்துகீசிய வம்சாவளினருக்கு கிடைக்கும் சலுகைகள் கூட நமக்கு மறுக்கப்படுகின்றன. நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்களின் பங்கு என்ன? நாம் பிச்சை கேட்கவில்லை. நான் அரசியல்வாதியும் அல்ல. நீங்கள் மட்டும், இந்திய சமூகமல்ல. ஆக, ஒட்டு மொத்த இந்தியர்களின் ஓட்டு ஒரு அரசியல் கட்சிக்கென்று சொல்வதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. சிந்தித்து செயல்படுவோம். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயலாதீர்கள். B N கோ மற்ற எந்த அரசியல் கச்சிக்கோ ஆதரவு தெரிவிக்க விரும்பினால், ஆதாரத்தை முன் வையுங்கள். பிறகு யோசிப்போம், ஆளத்தகுந்தவர் யார் என்று.சிந்தித்து செயல்பட இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
இந்நாட்டு இந்திய சமுதாயம் மாலுமி இல்லாத கப்பல் என்பதுதான் தற்போதைய உண்மை நிலை. கண்டவனும் ஏறி ஓட்டப்பார்க்கிறான் – கப்பலை..! என்பதும் உண்மையே. ஆனால் வரும் பொதுத் தேர்தலில் நம் இளையோர் ‘RM50 Hamper.க்கும், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சீனிக்கும், ஆட்டிறைச்சிக்கும் வசப்படப் போவதில்லை.வர்கள் விலை போகமாட்டார்கள். இன்றைய நம் இளையோர் படித்தவர்கள். அவர்கள் உயர் கல்வி, அரசு வேலை வாய்ப்பு போன்றவற்றில் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறோம், அலைக்கழிக்கப்படுகிறோம் என்பதையெல்லாம் கண்டு மனம் வெதும்பி நிற்கிறார்கள். வரும் பொதுத் தேர்தலில் (அது இப்போது நடந்தாலும்) ஒரு மாற்றத்தை உண்டுபண்ணுவார்கள்.
லூசுகள இருந்தால் என் ஆழ முடியும்…அப்போதான் அவர்கள் மண்டையை ஈஸாக காசலம், கரைக்கலாம், சம்பல் பண்ணலாம் , porikkalam, கோரெங் பண்ணலாம்…இப்புடிதான் உங்களுக்கு பிடிக்கும்.. எங்கள் அறிவுக்கு நீங்கள் எம்மாதிரம்…நீதி க்கு நீங்கள் காணமல் போய்டுவிங்க. ..நீங்கள்
உலக வரலாறில் எங்கே .?
முதலில் பொன் ரங்கன் ஒரு உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்.தமிழன் தமிழன் என்று கூவ இது தமிழ் நாடு இல்லை ,நான் மலையாளி என்று கூற இது கேரளா இல்லை ,நான் தெலுங்கர் என்று சொல்ல இது ஆந்திராவும் இல்லை .நம் மூன்று இனமும் மலாய்காரன் கண்ணுக்கு கெலிங் தான் என்பதை நாம் மறந்து விடகூடாது . இப்படி நான் சொல்ல ஒரு காரணம் உண்டு ,சமீபத்தில் உலக தமிழர் மாமன்றம் நடத்திய ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுரிந்தேன் . அந்த நிகழ்சியை தலைமை தாங்க கிம்மா தலைவரை அழைத்து இருந்தார்கள் . அப்போது அவர் கொடுத்த ஒரு விளக்கத்திலிருந்து , இந்தியர்கள் பத்து சதவிததிளிருந்து எப்படி ஏழு சதவிதத்திட்கு வந்தார்கள் என்பதை புரிந்து கொண்டேன் . இரண்டரை லச்சம் இந்திய முஸ்லிம் மலேசிய மக்கள் , மலேசிய இந்தியர்கள் என்ற நீரோடையிலிருந்து பிரிந்து பூமி புத்ரா என்ற அந்தஸ்தோடு அம்னோவில் இணைந்து விட்டார்கள் என்பதே !.இன்னும் இதைபோன்று தெலுங்கர்களும் , மலையாளிகளும் பிரிந்து போய்விட்டால் நம் பாடு பல்லே லக்கா பல்லே லக்கா தான். மலேசியாவை பொறுத்த வரை தமிழன் என்று பிரித்து சொல்வதை விட இந்தியர்கள் என்று சேர்த்து சொல்வதே ,எதிர்காலத்தில் நம் மனதுக்கும் நல்லது ,நம்ப உடம்புக்கும் நல்லது .
Anonymous என்று வந்த போதே உங்களுக்கு துணிச்சலா ஒரு இனத்துக்கு சொந்தக்காரனா வெளி வர வக்கில்லை. முதலில் என் மேற்காணும் கட்டுரையில் இந்தியர்கள் தமிழர்கள் என்றுதான் எழுதி உள்ளேன். என்னை பெற்றவர்கள் தமிழர்கள். என் தாய் மொழி தமிழ், என் சுய தொன்மையான மொழி இருக்க என் இனம் தமிழினம், உலகில் ஒரு மொழிக்கும் சொந்தமில்லாத இந்தியன் பட்டியலில் என்னை நான் இணைக்க வேண்டிய செயற்கை புலப்பு எனக்கு வேண்டாம். என் Race / அல்லது Bangsa Tamilan என்றுதான் என் அப்பா பதிவு செய்து உள்ளார். என் பிள்ளைகளுக்கும் தமிழன் என்ற உரிமையை பதிவில் காத்துள்ளேன் என் பேரனுக்கும் தமிழவன என்ற பேர்தான். நான் இடையன் திராவிடனும் அல்ல. உங்களை போன்ற தமிழில் இருந்து போன அரை குறை தெலுங்கரும் அல்ல மலையாளியும் அல்ல ! ஆதி தமிழனுக்கு பிறகுதான் திராவிடம். என் இனம் தமிழ் இனம் என்ற தனித்துவ மரபில், மரபணுவில் பிறந்த எனக்கு இந்தியன் என்ற ஆங்கிலேயன் பிச்சை அடையாளம் தேவை இல்லை. இந்தியனின் 90 % சதவிதம் தமிழன்தான் மலேசியாவில் இருக்கோம். முஸ்லிம் தோழர்களும் இனத்தில் தமிழன் தான் மதத்தால் முஸ்லிம் என்றால் அது இடைச்சருகலாக வந்தது. அல்லத்து வசதிக்கு சரிக்கி புகுந்தது. பிறகு மலேசியா அசிங்க அரசியலுக்கு அடிமையானது. இன்று சபாவில் 68,000 பிரஜா உரிமையில் எத்தனை இந்தியன் இந்தியா முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரமா போனது. அதில் பொய் பூமிபுத்ரா ஆனது எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் காலம் வந்து விட்டது.
உன் இனம்தான் உன் தாயின் ரத்தம். அதுக்கே வசதிக்கு விலை போகும் வேசித்தனம் தமிழனுக்கு வரக்கூடாது. நாங்கள் யாரையும் சேர்க்கவும் இல்லை பிரிந்து போ என்று சொன்னதும் இல்லை கலப்பு காதலுக்கு கதவு அடைப்பதும் இலை வந்தவளை மஞ்சள் துணி போட்டு அறுப்பதுமில்லை. கோங்கரா என்று ஏசுவதும் இல்லை காரணம் எல்லாமே எங்கள் தமிழ் அடிப்படை மரபணு விந்துதான்.
நான் மலேசியா தமிழன் இந்தியன் அரசியல் எழுதினேன். நீயோ அரிப்பு கொட்டைபோல இனசசொரியல் சங்கமம் செய்துள்ளாய் ? நீ தெளிவு பெறவே இந்த சமரசம். இனம் ,மொழி ,அரசியல் வரலாறு தெரியாமல் நரி நண்டு பொந்தில் வாலை விட்ட கதைபோல கடிபட வேண்டாம்.
விடியலுக்கு வெளிச்சம் தர ஒரு புதிய அரசியல் சூரியன் உதிக்க வேண்டும் என்பது நமது ஆசை. முதலில் யார்? பிறகு எப்படி என்று சிந்திக்கலாம் …. இது நடக்க இன்றைய பழசுகள் பவித்தரமாய் ஒதுக்கள் பட வேண்டும். இந்த இடிக்கும் மின்னலுக்கும் இவர்கள் தயார் என்றால் முதல் படி கிளியர் ! அடுத்த
புயலை சந்திக்க இளையோர் இணைய வேண்டும். யார் அந்த விவேங்கை ?……சரியான ஆதங்கம் ……..தலை வணங்குகிறேன் …..உங்கள் உ. ப. த ….சரியான இலக்கு கட்சி யாக மாற்றுங்கள்….உங்கள் தளபதி சகோதர்கள் பலர் உள்ளனர் எனக்கு தெரியும் ….அதில் படித்த பட்ட தாரிகள்…உள்ளனர்…….சங்கு முழங்கட்டும் தாரை…தப்பட்டை கிளப்ப்படும்ம்ம்
THOVANNA PAAVANNA யோவ் ,உனக்கு உதாரணத்துக்கு சுத்த தமிழ் நாட்டு தலைவர்கள் கிடைக்க வில்லையா /போயும் போயும் காந்தியா கிடைத்தான் ?
அவரவருக்கு அவரவர் தாய்மொழி முக்கியம். அதை ஏன் உரசிப் பார்ப்பானேன்?
ஐயா MK காமராஜர் ஒரு தமிழர்தானே? அவர் ஒரு கால கட்டத்தில் இந்தியாவின், தமிழ் நாடு மாகாணத்தின் முதல்மந்திரியாக இருந்தவர். அவர் எந்த சொத்தும் வைத்திருக்கவில்லை. கிருபானந்த வாரியார் அவர்கள் சாகும்வரை மேல்சட்டை கூட போடாமல் இருந்தாரே. இன்று வாழும் 55 வயதுக்குள் தமிழில் 65 புத்தகங்களை எழுதியுள்ள jerry என்பவரை உமக்கு தெரியுமா? இவரும் ஒரு தமிழரே அவர் ஒரு மேதை அதனால்தான் அவர் இன்னும் பிரபலமாகதிருக்கிறார். அவர் காலில் செருப்பு அணிவதில்லை. போட்டுக்கொள்ளும் உடையும் இரண்டே set மட்டுமே. உலக கத்தோலிக்க தலைவரான போப்பாண்டவரை சந்திக்கும் அழைப்பு கிடைத்தப்போதும் காலனி எதுவும் அணியாமலே சென்று கண்டாராம். இவருக்கும் எவ்வித சொத்தும் கிடையாது. இவர் போன்றோரை உமக்கு கண்டிப்பாக தெரியாது. காந்தியையோ எல்லோரும் அறிவர். ஆக உதாரணம் காண்பிக்கும்போது பெரும்பாலோர் புரிந்துகொள்ளும் வகையில் கூறுவதே சால சிறந்தது. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். நீர் என்னைவிட அதிகம் தெரிந்தவராக இருக்கலாம். அதனால் எவரையும் மரியாதை குறைவாக நடத்தினால் மற்ற மூன்று விரல்களும் உம்மை குறிக்கின்றன என்பதை எவரும் மறக்ககூடாது. இதுபோன்ற பொது ஊடகங்களை எல்லோரின் நன்மைக்காக பயன்படுத்தி அனைவரும் நலம் காண்போம். நம் எல்லோரையும் இறைவன் வெகுவாக ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
THOVANNA PAAVANNA சரி நான் ஏற்றுக்கொள்கிறேன் காமராஜர் ஒரு தமிழர் உண்மைதான் ,அப்புறம் எதுக்கு அந்த காந்தி பயல் சும்மா சொல்லிகிடு இருக்கோணும் ?
MK, காந்திப்பயல் மேல் (அவர் மகனோ?) உங்களுக்கு என்ன கோபம்?விளக்கினால் எங்களுக்கும் உங்கள் கோபம் புரியும்.
பொன் ரங்கன் அவர்களே மலையாளிகளும் , தெலுங்கர்களும் ஏன் தமிழ் அடையாளங்களை வேண்டாம் என்று விட்டு போனார்கள் என்பதையும் தெளிவாக எழுத முடியுமா ?
மங்கை முதலில் தமிழ் தமிழன் என்ற பொருளுக்கு அர்த்தம் பாருங்கள்.
தமிழ் அது ஒரு மொழி. யார் வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் படிக்கலாம். நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழன் என்ற இனம் வரும்போது தமிழ் தாய் பெற்றவனாகத்தான் இருக்க முடியும். ஆதி தமிழனுக்கு தமிழ்தான் தாய் மொழி. நீங்கள் சொன்ன இருவரும் ஆரியன் இனக்கலப்பில் வடக்கிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு தமிழ் மீது உறவு உணர்வு தமிழன் மரபின தொடர்பு இல்லாதவர்கள். தமிழியல் கலப்பில் தங்களுக்கு ஒரு மொழி வேண்டி தமிழை உலப்பினார்கள். வசதிக்கு தமிழனிடம் தமிழ் பேசும் இந்த ஒசியர்கள் அவர்கள் கூட்டத்தில் தமிழே பேச மாட்டார்கள். உதாரணத்துக்கு வைகோ வீட்டில் தமிழ் பேசுவது இல்லை அது அவர் உரிமை ஆனால் தமிழை வைத்து அரசியல் நடத்துவது அயோக்கியத்தனம். இதனால்தான் இன்று தமிழ் நாடு என்று ஒரு மாநிலத்தை நாடு என்று அடையாளப்படுத்தி தமிழர்களை ஏய்க்க இதரவர்கள் வசதியாக அரசியல் நடத்துகிறார்கள். இன்று தமிழ் மாநிலத்தில் இதரவன் அரசியல் ஆளுமைதான் கொடிககட்டி பறக்கிறது. ஆக அரசியல் வணிக வாய்ப்புக்கும் வசதிக்கும் இவர்கள் தங்களை தமிழன் என்று சொல்வதில்.அனால் நடிப்பார்கள்.
விந்திய மலைக்குத் தெற்க்கே தொன்று தொட்டு வாழ்ந்தவர்கள் இன்று தமிழர் என்போரே. அன்று திராவிடர். இது மானிடவியல் அடிப்படையில் ஓர் இனம். மொழியின் அடிப்படையில் வந்த இனம் அன்று. கடந்த 700 வருடத்திற்கு முன்புதான் மொழி அளவில் தெலுங்கு மொழி உருபெற்றது. இது தமிழ் பேசி வாழ்ந்த மக்களிடையே நாளடைவில் வடமொழிகளுடன் அதிக கலப்பு நேர்ந்ததால் தெலுங்கு மொழி தமிழ் மொழியில் இருந்து அதிக மாறுதலுக்கு உள்ளானது. இன்றும் தெலுங்கு மொழியில் இருக்கும் பல சொற்களின் வேர்ச்சொல்லை பிரித்து உரித்துப் பார்த்தால் அதில் தமிழ் மொழி இருப்பதைக் காணலாம். வேற்று மொழி பேசும் மக்களின் கலை கலாச்சாரமும் அவர்தம் நிலவியலுக்கு ஏற்ப மாறுப்பட்டது. மொழியால், கலை கலாச்சாரத்தால் மாறுபட்ட மக்கள் தங்களை தனிப்படுத்திக் காட்டிக் கொள்ளத் தொடங்கியது முதல் வேற்றுமை ஏற்பட்டு மேலும் விரிசல் அடைந்தது. பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றபொழுது பேச்சு மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப் பட்டதால் இது நிரந்தமாகியது. மலையாள மொழி கடந்த 400 வருடங்களுக்கு முன்புதான் மொழி அளவில் உருபெற்றது. இது தமிழில் இருந்து தோன்றிய மொழி இல்லை என்று எவராவது சொல்லப் புறப்பட்டால் பதில் கருத்து எழுதலாம். பின்னர் இதை ஒரு கருத்துக் களமாகவும் நடத்தலாம்.
Theni தமிழ்மொழி கலைபிரர்கள் உங்களுக்கு கற்றுகொடுத்த மொழி ,தமிழ் மொழி பேசியதால்தான் நீங்கள் தமிழச்சி. அந்த கலைப்ரர்கள் கற்றுகொடுக்காத முன்பு நீங்கள் வெறும் மொழியில்லாத காட்டு மிராண்டிதான்
நீர் எழுதிக் கொண்டிருக்கும் என் தாய் தமிழ் மொழிக்கு இலக்கண விதி 2500 ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியரால் எழுதப் பட்டுள்ளது. ஒரு மொழிக்கு இலக்கண விதி வருமுன்பே அம்மொழி பல்லோரால் பல ஆயிரம் வருடத்திற்கு முன்பே பேசப் பட்டிருக்க வேண்டும். அதன் பின் அம்மொழியில் இலக்கியம் வளர்ந்திருக்க வேண்டும். அப்படியானால் தமிழ் மொழியின் வயது இன்றையிலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசப் பட்டிருக்க வேண்டும். அதன் பின்னரே தமிழ் மொழி நெறிபடுத்தப் பட்டு அதற்கு இலக்கணம் வரையப் பட்டிருக்கும். தமிழர்களுக்கு கிடைத்த நூல்களிலேயே தொல்காப்பியம்தான் தொன்மையானது. இது தமிழர்களின் வாழ்வியலையும் வெளிபடுத்தும் நூல். இது இடைச் சங்கத்து காலத்தில் இயற்றப்பட்டது. களப்பிரர் பாண்டிய நாட்டை ஆண்டது ஏறக்குறைய கி.பி. 200 முதல் கி.பி. 500 என்றே இந்திய தென்னாட்டு வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. வரலாறு இப்படி இருக்க, தமிழன் அல்லாதவர் தமிழுக்கும் தமிழருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வன்னத்தில் எழுதுவது என் தாய் தமிழை பழிப்பதாகும். நீர் தமிழர் அல்ல என்பதை உமது முந்தைய கருத்துக்களின் மூலம் நானறிவேன். உம்முடைய வடுக புத்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் நல்லது. இல்லையேல் அதி நாசம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த தெலுங்கு,மலையாளம் அல்லது கன்னடர்களை கண்டீர்கள்? தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க இவை அனைத்தும் ஆரியர்கள் விதைத்த விதை, அதை கண்ட வந்தேறிகளும் அவர்தம் மதங்களை இருக்குமதி செய்தனர்;ஊரும் ரெண்டு பட்டது….கூத்தாடிகளும் கொண்டாடுகின்றனர்.
இயற்கை மாத குமரி கண்டத்தை அழிந்த காரணன் இப்போதுதான் புரிகிறது.
களப்பிரர்கள் தமிழர்களே என்பது புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. தமிழர்கள் மன்னராட்சியை எதிர்த்து வெற்றிகண்டு செலுத்திய ஆட்சியே களப்பிரர்களின் ஆட்சி. மூவேந்தர்கள் ஆரிய அடிவருடிகளாக சாராதன குடிமக்களுக்கு எதிராக செயல்பட்டதை எதிர்த்து வந்த மக்களின் ஆட்சியே அது. இந்த அற்புதமான எழுச்சியின் வரலாற்றை பின்பு வந்த ஆரிய அடிவருடிகளின் மன்னராட்சி தடயங்களை முற்றிலுமாக அழித்துவிட்டதாகவும் அதில் தப்பிய ஆதாரங்கள் இன்று தமிழனின் எழுச்சியைப் பறைசாற்றுகின்றன. தயவு செய்து அன்மைய ஆய்வுகளைப் படித்து தெளிவுபெற வேண்டுகிறேன்.
தமிழரே, களப்பிரர் ஆட்சியைப் பற்றிய தங்களின் குறிப்புக்களை இதற்கு முன்பே கண்டுள்ளேன். தங்களுக்கு கிடைத்த தகவல்களின் மூலத்தை குறிப்பிட்டால் ஆராய்ச்சி செய்ய ஏதுவாக இருக்கும்.
நான் மலையாளம் , தெலுகு , கன்னட மொழி படங்கள் நிகழ்சிகள் என்று அனைத்தும் பார்ப்பேன் . நான் கண்ட வரை மலையாளத்தில் அதிக தமிழ் சொற்கள் உண்டு . தெலுகு மொழியில் ழ கிடையாது , சமஸ்க்ருத வார்த்தைகளே அதிகம் . கன்னடத்தில் அப்பாவை அப்பா என்றே அழைக்கின்றனர். இன்னும் பல உதாரணங்களை சொல்லலாம் . தெலுகு கிர்த்தனைகளை தமிழுக்கு மொழி பெயர்த்த வர்களும் உண்டு . அதே போல மலையாள மந்திரங்கள் தமிழுக்கு மொழி பெயர்த்தார்கள் . இருந்த போதும் அவர்கள் அந்த மந்திரத்தை உச்சரித்து சங்கல்பம் செய்தால் மட்டுமே பலன் உண்டு என்பது போல இன்று அணைத்து நல்லது கேட்டது அவர்களே செய்கின்றனர் . பொருட்களில் கலப்படம் என்றால் முகம் சுளிக்கும் பலர் மொழியில் கலப்படம் செய்தே பேசுகின்றனர் . தென் இந்தியாவில் லே தமிழ் நாட்டில் தான் அதிக கலப்பு மனம் செய்கின்றனர் என்று அண்மைய சேர்வே சொல்கிறது . அவர்கள் குழந்தைகளும் அங்கிலம் தான் அதிகமாக பேசுகின்றனர் . அப்படியானால் ??? இன்னும் 20 30 ஆண்டுகளில்த பட்சை தமிழினம் இருக்குமா ?
இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழினம் தமிழ் இனமாகவே இருக்கும். தமிழ் நாட்டில் எங்களது பூர்விக கிராமத்தில் நிறைய ஆண்கள் மலையாளப் பெண்களைத் திருமணம் செய்கின்றனர். அப்படியே தெலுகு, கன்னடப் பெண்களைத் திருமணம் செய்தாலும் பெரும்பாலும் அவர்கள் தமிழர்களாகத்தான் வாழ்கிறார்கள். என்னதான் ஆங்கிலம் பேசினாலும் அவர்களின் சுற்றுப்புறம் தமிழர்களைச் சார்ந்தே இருக்கின்றது. அதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
தமிழ் நாட்டு தொலைகாட்சி நிகழ்சிகளைப் பார்க்கும் பொழுது அங்கே தமிழர் தம் மொழி, கலை கலாச்சாரங்களோடு வாழ்கின்றார்களா என்ற பெரிய கேள்விக்குறி எழுகின்றது. பொருளாதார வளர்ச்சிப் பெற்ற தமிழ் நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் தமிழை மறந்து ஆங்கிலம் மேன்மையானது என்ற மயக்கத்தில் உள்ளார் போலும். மேலும் சென்னை போன்ற பெரிய பட்டணங்களில் இந்தியா முழுமையும் இருந்து வரும் பல்லின மக்கள் (‘Metropolitan’) வாழும் இடமாகிப் போய் விட்டதால் தமிழும் ‘thanglish’ – ஆக மாறிவிட்டது. வாழ்வதும், தாழ்வது, எல்லாம் தமிழன் செயல்.
எனதருமை சகோதரன் தேனீ அவர்களின் வேண்டுதலுக்கு மதிப்பளித்து கீழ்கண்ட ஆய்வு தொகுப்புகளைப் தமிழ் ஆய்வாளர்களும் ,தமிழ்ப் பற்றாளர்களும் பெற்று பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக அதன் விபரங்களை தந்துள்ளேன். பெற்று பயனடைய வாழ்த்துகிறேன். ” களப்பிர அரசர்கள் வைதீகச் சமய எதிர்ப்பாளர்கள்” எனும் தலைப்பில் ஆ.பத்மாவதி எனும் ஆய்வாளரின் கட்டுரையில் கிடைத்திருக்கும் சில ஆதாரங்களை முன்வைத்துள்ளார். படிக்கவும். நன்றி!
அறியப்படாத தமிழ் உலகம் தொகுப்பாசிரியர்கள்: பா.இளமாறன், ஜ.சிவக்குமார், கோ.கணேஷ், புதிய புத்தகம் பேசுது, 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. விலை .225/- கணக்கற்ற மனிதர்களும் கோடிகளில் மானியங்களும் கொண்ட பெரும் பல்கலைக்கழகங்கள் பார்க்க வேண்டிய வேலையைச் சில தனிமனிதர்கள் தங்களது ஆர்வத்தின் மூலமாகச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம், ‘அறியப்படாத தமிழ் உலகம்’ என்ற செறிவான தொகுப்பு நூல். ‘புதிய புத்தகம் பேசுது’ சார்பில் வெளியிடப்படும் மூன்றாவது முக்கிய ஆவணம் இது. தமிழ்ப் பதிப் புலகம் (1800-2009), தமிழ்நூல் தொகுப்பு வரலாறு (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) ஆகிய இரண்டு ஆவணங்கள் ஏற்கெனவே இவர்களால் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்ப் பதிப்பு, தமிழ்நூல் தொகுப்பு, அறியப்படாத தமிழ் ஆளுமைகள் என்று, இலக்கியத் தரவுகளைச் சொல்லிச் சிலாகிக்காமல், சமூகவியல் நோக்கில் ஆவணப்படுத்தி வருவதுதான் தொடர் வெற் றிக்கு அடிப்படையாக இருக்க முடியும். ‘சமூக இடைவெளிகளை இட்டு நிரப்பும் முயற்சி’. . .
நன்றி தமிழரே. குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் பெற்று படித்து விட்டு பின்னொரு நாள் தேவை வரும்பொழுது களப்பிரர் கால ஆட்சியைப் பற்றி நம் செம்பருத்தி வாசகர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்துக் கொள்வோம்.
பெரிய நிலப்பரப்பைக் கொண்ட தமிழ்நாடு விரிந்து பரந்து கிடந்தபோது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் சில மொழிகள் எல்லாம் தமிழுக்கு உள்ளும் தமிழர்களாலும் பேசப்பட்ட வட்டார மொழியாகவே இருந்தன. பின்பு ஆரிய மொழியின் தாக்கத்தினாலும் ஆரியர்களின் ஆதிக்க பலத்தினாலும், ஆரியர்களின் முன் யோசனையினாலும் மொழிக்கலப்பையும் மொழிச்சிதைவையும் இலாவகமாக ஏற்படுத்தியதின் வழி தனி எழுத்துக்களும், தனி இலக்கணங்களும், தனி இலக்கியங்கள் ,புராணங்கள் முதலியன தோன்றவே ( திட்டமிட்டே முன்னேற்பாடோடு செய்யப்பட்டது) தமிழரின் கிளைகள் அடையாளமிழந்து தனி இனமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. இன்னும்கூட தமிழர்களின் வட்டார மொழிகள் உண்டு. எச்சரிக்கையாக தமிழன் இல்லை என்றால் தமிழினம் பிழவுபட்டு புது மொழியாகவும், புது இனமாகவும் மாறி தமிழரை , தமிழினத்தை சிதைத்துவிடும். இது கற்பனையல்ல என்பதை மாத்திரம் சொல்லி வைக்கிறேன். தமிழாலும் ,தமிழனாகவும் தமிழரின் பண்பு நலன் கெடாமல் தமிழர்கள் எச்சரிக்கையாக ஏன் வாழப்பழகவேண்டும் என்பதும், தமிழரிடை சாதியம் இருந்தால் அதனால் வரப்போகும் ஆபத்தையும் உணருதல் வேண்டும்.
நமது சமுதாயம் இரண்டுகட்ட நிலையில் அரசியல் பொயிகொண்டுஇருகிரது ….5 நிலையில் பிரிந்துளோம் ,ஒன்று அரசியல்வாதிகள் பதவிக்காக தலையாட்டிகொன்றிபது பணத்துக்காக பாரிசன்,,பி கே ஆர் ,,,உள்ளவர்கள் பொமைபோல் மலைகார்களுக்கு அடிமைதனம் காட்டுவது ,2ஆவது நிலை …தொழில் அதிபர்கள் அவர்கள் அவர்கள் குடும்பம் என்று போதம் பணம் என்று வாழ்ந்துகொன்றிகிரர்கள் ,,3நிலை சிறு தொழில் வியாபரிகள் அவர்களுக்கும் போதம் பணம் ,,,,4நிலயில் அரசாங்க உழியர்கள் லோயர்,டாக்டர் ,,பெரிய நிறுவனத்தில் வேலைசெயபவர்கள்,,,பேங்க் ,இன்சுரன்ஸ்,,இன்னும் சில நிறுவனம் ,,இந்தியர்கள் பணத்தை கொளையடிது வாழும் ரவடிகள் ,,இவர்களும் சந்தோசமாக வாள்கிரறுகள்,,,,இதை தவிர்த்து 70% இந்தியர்கள் 5 நிலையில்,,சஞ்சிகுளிகளாக வேளை செய்கிறாருகள்,,,லொறி டிரைவர் ,கம்பெனி வேலை ,எஸ்டேட் வேலை ,இன்னும் நறைய வேலைகளை அடிகிகொண்டுபோகலம் ,இவர்களுடைய கஷ்டத்தை எந்த தலைவர் புரிந்து கொண்டிருக்கிராருகள் ,,நமது சமுதையத்தை குர்போட்டு வசுருகானுங்க ,,,2 அரசாங்கமும் ,ஆதலால் இந்தியர்களே வரும் தேர்தல பாத்து போடுங்க ஓட்டு,,,முடிந்தால் ஓட்டு போடா போவதைங்க,,,,நமக்கு அருசி கொடுத்து ஏமாற்றானுங்க ””””’
கரியன் சார் ,சொனது உண்மையான கருத்து,முடிந்தால் ஓட்டு போட போகாமல் இருபது நல்லது,இவங்க என்ன செய்யறானுங்க,நாட்டுல வாளர அனைவரும் முட்டாள்,,,இதை மகாதிர்ரே சொல்லிவிடார் ,சந்தோசம் ,
சமுதாய உணர்வு மற்றும் மக்கள் சொந்த உணர்வு இல்லை எனில் எந்த போராட்டமும் வெற்றி பெறாது. எத்தனை உதயா வந்தாலும் சமுதாயம் மாறவில்லை எனில் அவருடைய போராட்டம் கானல் நீர் தான். மக்களே உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். தேசிய முன்னணியா மக்கள் கூடனியா ? முடிவு வாக்கு பெட்டியில்.
சமுதாயம் சீர்கெட காரணம் ஒன்றுதான்..- வாக்கு சக்தி – எல்லா தலைவனும் வாழ சொல்கிறார்களே தவிர வாழ்ந்து காட்டுவதில்லை -ஆகவே, வாய் கிழிய மேடையில் பேசினாலும் ,,அவர்களின் சொல்வன்மை மக்களை மனதை உலுக்க வில்லை.காந்திக்கு பிறகு எல்லா தலைவர்களும் மக்களை ஆட்டு மந்தைகலாகதானே பயன் படுத்தினார்கள் ???பகுத்தறிவு பேசி சொத்து சேர்க்க முயல – பலர் கழன்று பக்திக்கு மாறினார்கள் – தடம் மாறிய சன்யாசிகளால் பலர் நாத்திக பாதைக்கு சென்றார்கள்..கலியுகம் இது – இப்படிதான் நடக்கும்..சத்தியவான் ஒருவன் இனி பிறந்தால் தான் உண்டு…