2014ம் ஆண்டு குழந்தைகளுக்கு கொடூரமான ஆண்டானது: ஐ.நா. சபை குழந்தைகள் நல நிதியம் அறிவிப்பு

2014ம் ஆண்டை குழந்தைகளுக்கு கொடூரமான  ஆண்டாக ஐ.நா. சபையின் குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் உலகம் முழுவதும் பல்வேறு வன்முறை சம்பவங்களால் 15 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் 2014ம் ஆண்டை குழந்தைகளுக்கு எதிரான ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது மத்திய ஆப்ரிக்க குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா, உக்ரைன் ஆக்ரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறை சம்பங்களால் பல மில்லியன் குழந்தைகள் தங்கள் நாடுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர். ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 68 மில்லியன் குழந்தைகள் போலியா நோயால் தாக்கப்பட்டனர்.

தெற்கு சூடானில் 70 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைவால் சிகிச்சை பெற்றனர். எனவே 2014ம் ஆண்டை குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான ஆண்டாக இருந்ததாக ஐ.நா சபையின் குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது. -http://www.dinamani.com