பாலஸ்தீன அமைச்சர் ஒருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரை பகுதியில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்றுவரும் இரு நாட்டவர்களுக்கும் இடையேயான போராட்டத்தை பார்வையிட பாலஸ்தீன அமைச்சர் ஜையாத் அபு (jayath abu) இன் இன்று அங்கு சென்றிருந்தார்.
அப்போது இஸ்ரேல் இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் அவரை வரவிடாமல் தடுத்தனர்.
எனினும் அதையும் மீறி அப்பகுதிக்கு செல்ல முயன்ற அமைச்சரை இஸ்ரேல் ராணுவத்தினர் பிடித்து தள்ளி அடித்து உதைத்துள்ளனர்.
மேலும் துப்பாக்கியின் மறு முனையால் அமைச்சரின் நெஞ்சில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அவர் இருந்துள்ளார்.
இதனையடுத்து அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் போகும் வழியிலேயே அமைச்சரின் உயிர் பிரிந்துள்ளது.
இச்சம்பவம் இரு நாடுகளுக்கு இருக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. -http://world.lankasri.com