முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் கிராமம் முற்றுமுழுதாக சிங்கள கிராமமாக மாற்றப்படவுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கிராமத்தில் உள்ள 1500 ஏக்கர் காணிப்பரப்பை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த இரகசிய கூட்டம் ஒன்றில் வைத்து, வடக்கு காணி ஆணையாளர் பொன்னம்பலம் தயாநந்தன், சிங்களவர்களுக்கு தாரைவார்ப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.
இதன்அடிப்படையில் சிறிலங்காவின் அதிகாரிகள் இந்த காணிகளை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான ஆவணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பகுதியில் ஹம்பாந்தொட்டை உள்ளிட்ட சிறிலங்காவின் தெற்கு பகுதியில் இருந்து சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்படவிருப்பதாகவும், வடக்கில் உள்ள இராணுவத்தினருக்கும் அங்கு காணிகள் பகிரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -http://www.pathivu.com