ஹுடுட் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கிளந்தான் அரசு பரிந்துரைத்திருப்பது பக்கத்தான் ரக்யாட்டில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளுக்கு எதிரானது அல்ல என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறினார்.
“கொள்கை அளவில், இவ்விவகாரம் (ஹுடுட்மீது கருத்துவேறுபாடு நிலவும் என்பது) ஒப்புக்கொள்ளப்பட்டதுதான்”, என்றாரவர்.
“சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் பற்றி கிளந்தான் டிசம்பர் 28-இல் எங்களுக்கு விளக்கம் அளிக்கும்”, என முஸ்தபா தெரிவித்தார்.
1993 ஷியாரியா குற்றவியல் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவருவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை பக்கத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
“ஏற்கனவே இருக்கும் (ஷியாரியா குற்றவியல் சட்டம் (II) 1993) ஒன்றுக்குத்தான் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன”, என்றாரவர்.
வலிய திணிக்கப்படுகிறது. இது எல்லோருக்கும் பயன் அளிக்காது. குட்டனியில் உள்ளவர்களுக்கே இன்று மதிக்கவில்லையென்றால், இன்னும் குடுத்தால் இடம் கிடைத்தால் இன்னும் என்னவெல்லாம் செய்வீர்கள், சிந்திக்கவேண்டிய விஷயம்.
ஆமாம் எதிரானதல்ல,
ஆனால் ஆப்பு வைக்ககுடியது
கூட்டணிக்கு ‘கூட்பாய்’ சொல்ல அம்னோ போட்ட மந்திரத்தில் சிக்கிய கிளந்தான் மாநில கட்சித் தலைவர்கள் தானும் கெட்டு தன் கட்சியையும் கெடுத்த பெருமை பின்னாளில் தெரிய வரும்.