கிளந்தானின் பாஸ் அரசு, ஹுடுட் சட்டம் கொண்டுவருவதற்காக அவசர சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதில் கவனம் செலுத்துவதை விடுத்து அம்மாநிலத்தில் மோசமடைந்து வரும் வெள்ளத்தின்மீது கவனம் செலுத்துவது நல்லது என டிஏபி இளைஞர் பகுதி அறிவுறுத்தியுள்ளது.
“கிளந்தானையும் கிழக்குக் கரை மாநிலங்களையும் இயற்கைப் பேரிடர் தாக்கியுள்ள வேளையில் கிளந்தான் துணை மந்திரி புசார் முகம்மட் அமர் நிக் அப்துல்லாவும் அவரது நிர்வாகமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிப்பதில்தான் முழுக் கவனமும் செலுத்த வேண்டும்.
“பக்கத்தானின் பொதுவான நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதாகக் காண்பிக்கும் பேச்சுகளில் அவர் ஈடுபடக் கூடாது”, என டிஏபி இளைஞர் பகுதித் தலைவர் தியோ கொக் சியோங் கூறினார்.
மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில், புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவதை விடவும் ஹுடுட்டை அமல்படுத்துவதுதான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டது பாஸ் பக்கத்தானுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ளத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது என்றாரவர்.
“பக்கத்தானிலிருந்து வெளியேற வேண்டியது பாஸோ டிஏபியோ அல்ல. முகம்மட் அமர்தான் பாஸை விட்டு விலகிச் செல்ல வேண்டும். அவர்தான் கூட்டணியில் நிலவும் நல்லுறவைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்”, என தியோ காட்டமாகக் கூறினார். .
சரியாக பேசினீர்கள் . ஆனால் மத போதையில் மயங்கி கிடக்கும் மந்தைகளுக்கு எங்கே புரியபோகிறது???
நான்கு புறமும் படகில் kota baru மைய பகுதியில் நாங்கள் இதை பற்றி விவாதிக்க போவதகா nik abduh நேற்று கூறினானே அது என்னவயித்ராம்