ஹுடுட் தொடர்பான கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், பாஸ், கிளந்தானில் வெள்ளத் துயர்துடைப்புப் பணிகளுக்கு பினாங்கிலும் சிலாங்கூரிலுமுள்ள பக்கத்தான் பங்காளிகளிடம் உதவி கேட்டுள்ளது.
“சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியைத் தொடர்புகொண்டு ஒற்றுமையின் அடையாளமாக உதவி அளிக்குமாறு கேட்டேன்.
“சிலாங்கூர் அரசும் ஒத்துக்கொண்டது. எப்படிப்பட்ட உதவி என்பது அடுத்த சில நாள்களில் அறிவிக்கப்படும்”, என பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா ஓர் அறிக்கையில் கூறினார்.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கையும் தொடர்புகொள்ள முயன்றதாகவும் ஆனால், அவர் இன்னும் வெளிநாட்டிலிருந்து திரும்பவில்லை என்றும் ஹுசாம் கூறினார்.
ஏன் பங்காளிகளிடம் உதவி கேக்கிறீர்கள்.? வெள்ளம் இறைவன் கொடுத்த எச்சரிக்கை என்கிரீகளே ? அவரிடமே கேட்க வேண்டியதுதானே!
ஹுடுட் சட்டத்தில் பிச்சை கேட்கலாம் என்று ஒரு வரைமுறை உள்ளதோ.
ஹலால் பார்க்கும் நீங்கள் சினனிடம் கேட்க்க மாலுவா இல்லையா?
பாஸ் கோரிக்கை வைக்க வேண்டிய இடம் மத்திய அரசு.மற்ற மாநிலம் தானாக உதவ முன் வந்தால் ஏற்றுக்கொள்வதை விடுத்து வற்புறுத்துவது சரியாக படலிங்கோ !
மத்திய அரசு கஜானா காலி அலை ஓசை அதான் பலனா பலான விளையாட்டு விளையாட ஜெட்டிலே அலைந்தாலும் பொண்டாடிக்கு ஷாப்பிங் பண்ண காசு கொடுத்தாலும் அங்கே பணம் இல்லையாம் கொஞ்ச PKR இடம் பிச்சை கேட்டால்தான் பிரச்னை தீரும் போல