கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

mahinda_rajapaksaதமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஐவர் இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலரும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் ஜனாதிபதிக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

ஜனநாயக கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ராஜித ஹப்புவாராச்சி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இணைந்து கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.

மைத்திரிக்கு ஆதரவளிப்பது குறித்து கூட்டமைப்பினர் முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிலர் இன்று முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.

வவுனியாவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  வினோ நோதராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் சந்திரகுலசிங்கம், சுத்தானாந்தா இந்து இளைஞர் சங்க தலைவரும் தமிழரசுக் கட்சி மத்தியகுழு உறுப்பினருமான ந.சேனாதிராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் து.ரவி உள்ளிட்ட பலர் ஒன்றுகூடி ஆராய்ந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில், வன்னி தேர்தல் தொகுதிக்கென நியமிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ந.சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ள பிரசார நடவடிக்கைகளை கூட்டமைப்பு தீவிரமாக மேற்கொள்ளும் என்று தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகிறது

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என தெளிவாக அறிவிக்காத நிலையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-http://www.tamilwin.com

TAGS: