எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி என்பது உளவுத் தகவல்கள் மூலம் ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது.
நாளுக்கு நாள் ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை தேர்தல் தோல்வி குறித்த முன்னறிவிப்பை தெளிவாக வழங்குவதாக ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் உணர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடும் முடிவில் ஜனாதிபதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை தடுப்பது ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது.
மேலும் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக கூடுதல் ஆசனங்களை வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது ஆதரவாளர் ஒருவருக்கு பெற்றுக் கொடுப்பதும் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதன் மூலம் தொடர்ச்சியாக அரசியலில் தமது குடும்ப செல்வாக்கைத் தக்க வைத்துக்கொண்டு மீண்டும் அரசியல் தலைமைத்துவத்தை அடைவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வகுத்துள்ள புது வியூகத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது.
-http://www.tamilwin.com