நள்ளிரவில் 40 மாணவர்கள் கடத்தல்: எல்லை மீறும் தீவிரவாதிகளின் அட்டூழியம்

boko_haram_nigeriaநைஜீரியாவில் 40 மாணவர்களை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் தனிநாடு கோரி அரசுக்கு எதிராக போராடும் போகோ ஹாரம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ம் திகதி நள்ளிரவு மலாரி(Malari) கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு, அங்கிருந்த 40 மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர்.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களுக்கு 15 முதல் 23 வயதுக்குள் இருக்கும் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த முகமது சார்மி(Mohammed Zarami) என்ற நபர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தால் கவலையில் ஆழ்ந்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை மீட்டு தருமாறு ஐக்கிய நாடுகள் சபையில் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 மாணவர்களை தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் சிபோக்(Sebec) கிராமத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை தீவிரவாதிகள் கடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com