தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம், வடகிழக்கு நைஜீரியாவில் கைப்பற்றியுள்ள பன்னாட்டுப் படைத்தளத்தின் மீதான தனது பிடியை மேலும் பலப்படுத்தியுள்ளது.
அப்படைத்தளத்தின் கட்டுப்பாட்டை ஞாயிற்றுக்கிழமை, இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
பாகா எனும் இடத்தில் இருக்கும் இராணுவப்படையின் முகாம் மீது மோட்டார்பைக் மற்றும் சிரிய ரக டிரக்குகளில் வந்த நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள், தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்த ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை கொன்று குவித்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
சாட் ஏரியின் கரையில் அமைந்துள்ள, தாக்குதலுக்கு உள்ளான நைஜீரிய படைத்தளம், போர்னோ மாகாணத் தலைநகரான மைதுகுரியிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நைஜீரியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்தலில் போக்கோ ஹராம் தீவிரவாதிகளைக் ஒடுக்குவதில் நாட்டின் இராணுவம் தோல்வியடைந்துள்ளது முக்கியமான ஒரு விஷயமாம விவாதிக்கப்படுகிறது. -BBC