இஸ்லாத்துக்கு எதிராக ஜேர்மனியில் நடைபெறும் போராட்டத்தை போன்று, பிரான்சிலும் போராட்டம் நடைபெறவுள்ளது.
ஜேர்மனியில் இஸ்லாமியவாதிகள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் பெகிடா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் 100 பேர் வரையில் மட்டுமே இருந்த இந்த அமைப்பில், தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக போராட்டங்களை இந்த அமைப்பு நடத்தி வருகிறது, கடைசியாக டிரெஸ்டென்னில் நடைபெற்ற பேரணியில் சுமார் 18,000 பேர் வரை கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இதேபோன்ற போராட்டம் ஜனவரி 18ம் திகதி பிரான்சிலும் நடைபெறவுள்ளது.
இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் முதல் போராட்டம் என Pierre Cassen என்பவர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெகிடா அமைப்பு கூறுகையில், பிரான்சில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம், இவர்களது முயற்சி வெற்றி பெற தேவையான உதவிகளை செய்வோம் என தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com

























