இன்றைய தினம் பிரான்ஸ் பாரீஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று அனைத்து நாடுகளும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தால் பாரிஸ் நகரே ஆடிப்போயுள்ளது எனலாம். ஆனால் இச்சம்பவத்தின் பின்னணியில் என்ன உள்ளது என்பதனை வெளியிடுவதில் பல ஊடகங்கள் சற்று பின்னடிப்பை கடைப்பிடிப்பது தெரியவருகிறது. கொலைசெய்வது தான் ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. ஆனால் கொலை செய்ய தூண்டும் அளவுக்கு என்ன நடைபெற்றுள்ளது என்பதனை நாம் பார்க்கவேண்டும் அல்லவா ?
பாரீசில் இருந்து வெளியாகும் “சார்ளி ஹெப்டோ” என்னும் வார சஞ்சிகையில், இஸ்லாமிய புனிதரான மொகமெட்டை கேலிச் சித்திரமாக வரைந்து வெளியிட்டுள்ளார்கள். குறித்த இந்த சஞ்சிகை தொடர்சியாக பல தடவை இவ்வாறு இஸ்லாமிய மதத்தை கேலி செய்து வந்துள்ளது. ஆனால் கேட்டால் உடனே பத்திரிகை சுதந்திரம் என்று கூறிவிடுவார்கள். புத்தரின் உருவத்தை ஒரு பெண் கையில் பச்சை குத்தியிருந்ததற்காக நாட்டை விட்டு வெளியேறுமாறு, இலங்கை அரசாங்கம் பணித்தது. இந்துக் கடவுளான காளியின் உருவம் பதித்த ரி- சேட்டை ஒரு நிறுவனம் வெளியிட்டு பலத்த கண்டனத்தை வாங்கிக்கட்டியது. நாம் ஏன் மதங்களை பழித்து கேலிசெய்ய வேண்டும் ? இதுவே இந்த 21ம் நூற்றாண்டில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து உலகின் பேரழிவுக்கு வழிகோலிக்கொண்டு உள்ளது.
சர்சைக்குரிய இந்த விடையத்தை ஊடகங்கள் ஏன்மீண்டும் மீண்டும் செய்து வருகிறது என்று தெரியவில்லை. குறித்த இந்த “சார்ளி ஹெப்டோ” சஞ்சிகையின் வாராந்த கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்த நேரத்தில் மிகவும் திட்டமிட்ட வகையில் தீவிரவாதிகள் அங்கே சென்றுள்ளார்கள். கார்டூன் ஓவியங்களை வரையும் 3 ஓவியர்கள், சஞ்சிகையின் முதன்மை ஆசிரியர் என்று மொத்தம் 8 ஊடகவியலாளர்கள் அங்கே இருந்துள்ளார்கள். அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். 2 பொலிசார் உட்பட மொத்தமாக 12 பேர் பரிதாபமாக இறந்துபோயுள்ளார்கள். ஒரு கறுப்பு நிற காரில் வந்த தீவிரவாதிகள் தாக்குதல் முடிந்த பின்னர் அந்தக் காரிலேயே தப்பிச் சென்று, பின்னர் அதனையும் விட்டு விட்டு வேறு ஒரு காரில் தப்பித்துவிட்டார்கள். பிரான்ஸ் பொலிசார் சல்லடை போட்டு தேடிவருகிறார்கள். இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை
இத்தாக்குதலை முஸ்லீம் தீவிரவாதிகள் தான் மேற்கொண்டுள்ளார்கள் என்று, பல நாடுகள் கூறுகிறது. ஆனால் பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை ஆயுதங்கள் அங்கே மிகவும் இலகுவாக கிடைக்கும் ஒரு பொருள் என்றே சொல்லலாம். மேலும் 100 யூரோக்களை கொடுத்தாலே காசுக்காக கொலைசெய்யும் “குருவிக்காரக்” கூட்டம்(அல்ஜீரியர்கள்) அங்கே அதிகமாக உள்ளார்கள். இந்த கான்ராக் கொலைகாரர்களை அவ்வளவு எளிதில் பிடிக்க முடியாது. பிரான்ஸ் நாட்டில் புலிகளின் முக்கியஸ்தர்கள் 2 பேர் இதுவரை இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் பரிதி கூட சுடப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார். ஆனால் இதுவரை இக்கொலையாளிகள் எவரும், சிக்கவில்லை. இந்த நிலையில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளமை பிரான்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதுஎனலாம்.
-http://www.athirvu.com
அதற்காகக் கொலைசெய்வது தப்பு…..
அதற்காகக் கொலைசெய்வது தப்பு…..