தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்க மகிந்த கடும் பிரயத்தனம்

vote_people_002அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் பாலமுனைப் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளப் பெருமக்களுக்கு எனத் தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரம் புலனாய்வாளர்களால் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தின் விலாசமான மார்ட்டீன் வீதி, யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு  இலங்கைத் தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் அறிக்கையாக இதனைக் காட்டுவதற்கு அரச புலனாய்வாளர்கள் திட்டமிட்டு இத்துண்டுப் பிரசுரத்தை விநியோகம் செய்துள்ளனர்.

இதனூடாக தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்கு திட்டமிட்ட வகையில் தமது செயற்பாடுகளை அரங்கேற்றி வருவதாக கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: