சற்று முன் பாரீஸ் தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்கள்: தற்போதைய திரடி தகவல்

parisநேற்றைய தினம்(07) பாரீசில் துப்பாக்கி சூடு நடத்தி 12 பேரை தீவிரவாதிகள் கொலைசெய்து இருந்தார்கள். பாரீஸ் நகரையே சல்லடை போட்டு தேடிவந்த பொலிசார் அந்த 3 தீவிரவாதிகள் பதுங்கி இருந்த கட்டடத்தை தற்போது சுற்றிவளைத்து விட்டார்கள் என்று அங்கிருந்து அதிர்வின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். அத்தோடு துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளில் இருவர் சகோதரர்கள் என்றும், இவர்கள் யெமன் நாட்டிற்கு சமீபத்தில் சென்று, பயிற்சிகளை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுபோக இவர்களின் பாஸ்போட் படங்களையும் பிரான்ஸ் பொலிசார் தற்போது மீடியாக்களுக்கு வெளியிட்டு உள்ளார்கள்.

கட்டடத்தை சுற்றி பிரான்ஸ் நாட்டு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. கன ரக ஆயுதங்கள் சகிதம் அவர்கள் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடத்தை சுற்றிவளைத்துள்ளார்கள். பாரிய துப்பாக்கிச் சூடு சத்தங்களும் கேட்ப்பதாக கூறப்படுகிறது.

-http://www.athirvu.com

 

பிரான்சில் மீண்டும் துப்பாக்கி சூடு- புதிய லிஸ்டை வெளியிட்டது அல்கொய்தா

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று மீண்டும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்சில் பத்திரிகை அலுவலகம் ஒன்றின் மீது நேற்று காலை உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு, ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 12 பேர் பலியானார்கள், 10 பேர் காயம் அடைந்தனர், இதனையடுத்து பாரிஸ் நகர் முழுதும் உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது.

இத்தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று சரணடைந்த இளைஞனிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் பாரீஸ் நகர் அருகே உள்ள மாண்ட்ரோக் நகரத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில் பொலிசார் ஒருவர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் இணைப்பு

புதிய லிஸ்டை வெளியிட்டது அல்கொய்தா

பிரான்சில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், சார்லி ஹெப்டோ இதழின் ஆசிரியர் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று டுவிட்டர் பக்கத்தில் அல்கொய்தா அமைப்பினர் புதிய படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதில் பல்வேறு தலைவர்கள், பிரமுகர்களின் படங்கள் மற்றும் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக இப்படத்தில் சார்லி ஹெப்டோ இதழ் ஆசிரியரின் படத்தை கிராஸ் செய்து வெளியிட்டுள்ளது.

-http://world.lankasri.com

பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல்: தீவிரவாதி சரண்

பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவர் சரணடைந்துள்ளார்.

பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நேற்று நுழைந்த 3 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 கார்ட்டூனிஸ்டுகளையும், 5 நிருபர்கள் மற்றும் 2 பொலிசாரை கொலை செய்துள்ளனர்.

இக் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவர் சரணடைந்துள்ளார், அவரது பெயர் ஹமித் மொராத்(வயது 18).

மற்ற இருவரும் சகோதரர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களது பெயர் சைத் கெளச்சி(வயது 34), செரீப் கெளச்சி(வயது 32).

தொடர்ந்து தலைமறைவாக உள்ள இவர்களது படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை வழக்கமாகவே எல்லா மதங்களையும் கிண்டல் செய்து செய்தி, கார்ட்டூன்கள் வெளியிட்டு வந்தது.

கடந்த 2011ம் ஆண்டு நபிகள் நாயகத்தால் எடிட் செய்யப்பட்ட எடிசன் என்று கூறி இந்த பத்திரிக்கை தனது இதழை வெளியிட்டது.

இதையடுத்து இதன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் கேலிச் சித்திரத்தை சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது, இதுவே நேற்றைய தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.