இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி- மைத்ரிபால ஸ்ரீசேன அதிபராகிறார்!!

maithiri_mahinda_001கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வியைத் தழுவி வருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேன முன்னிலை வகித்து வருவதால் இலங்கையின் அடுத்த அதிபராகிறார்.

மைத்ரிபாலவுக்கு 53%; ராஜபக்சேவுக்கு 45.6%; வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சேவும் அவரை எதிர்த்து 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேனவும் போட்டியிட்டனர்.

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி- மைத்ரிபால ஸ்ரீசேன அதிபராகிறார்!!

இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் 72% வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக தபால் வாக்குகளும் பின்னர் மக்கள் அளித்த வாக்குகளும் எண்ணப்பட்டன. தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகிந்த ராஜபக்சேவுக்கு மிக மிகக் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு மிக அதிக அளவில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர். சிங்களர் வாழும் பகுதிகளிலும் கூட ராஜபக்சே தோல்வியை சந்தித்துள்ளார். அங்கும் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

இதனால் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால ஸ்ரீசேன வெற்றி பெற இருப்பது உறுதியாகி வருகிறது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமான இல்லமான அலரி மாளிகையைவிட்டு மகிந்த ராஜபக்சே இரவோடு இரவாக வெளியேறிவிட்டார்.

தற்போதைய நிலையில் மைத்ரிபாலவுக்கு 53% வாக்குகளும் ராஜபக்சேவுக்கு 45.6% வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மைத்ரிபால பெற்ற வாக்குகள்: யாழ்ப்பாணம்- 17,994 சாவகச்சேரி -23,520 மானிப்பாய் -26,958 நல்லூர் -24,929; காங்கேசன் துறை- 18,729 ஊர்க்காவற்றுறை- 8,144 கிளிநொச்சி -38, 856 கோப்பாய் -27,161 நல்லூர்- 24,929 பருத்தித்துறை- 17,388 உடுப்பிட்டி -18,317 வட்டுக்கோட்டை: 20,873
http://tamil.oneindia.com

TAGS: