யாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராஜபக்சே மிக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால ஸ்ரீசேன மிக மிக அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்த மகிந்த ராஜபக்சே, தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசாகிய என்னையே தேர்ந்தெடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்து தமிழில் வாக்கு கேட்டார்.
ஆனால் தமிழ் மக்கள் ராஜபக்சேவை முற்று முழுதாக நிராகரித்து விட்டனர். ‘தெரிந்த பிசாசு’ ராஜபக்சேவை ஓட ஓட மேலும் அதிபர் தேர்தலில் மைத்ரிபால ஸ்ரீசேனவையே ஆதரிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தமிழ்க் கட்சிகள் அறிவித்திருந்தன.
இதனை ஏற்று தமிழர்களும் வாக்களித்துள்ளனர். ராஜபக்சேவை விட பல மடங்கு வாக்குகளை தமிழர் பகுதிகளில் மைத்ரிபால அள்ளியுள்ளார்.
தமிழர் வாழும் பகுதிகளில் மைத்ரிபால, ராஜபக்சே பெற்ற வாக்குகள் விவரம்
தொகுதி மைத்ரிபால ராஜபக்சே
யாழ். 17,994 4,502
சாவகச்சேரி 23,520 5,599
மானிப்பாய் 26,958 7,225
நல்லூர் 24,929; 5,405
காங்கேசன் துறை 18,729 5,705
ஊர்க்காவற்றுறை 8,144 5,959
கிளிநொச்சி 38, 856 13,300
கோப்பாய் 27,161 6,211
பருத்தித்துறை 17,388 4,213
உடுப்பிட்டி 18,317 3,937
வட்டுக்கோட்டை 20,873 7,791
வன்னி மாவட்டம் முல்லைத் தீவு – 35,441 7,935
வவுனியா – 55, 683 16,678
திருகோணமலை மூதூர் 57,352 7,132
சேருவில 24,733 26,716
திருகோணமலை 49,659 12,056
அந்த சிறுபான்மை வாக்குகள் கூட அங்கிருக்கும் சிங்கள ,மற்றும் தமிழ் முஸ்லிம்கள் வாக்குகலாகத்தான் இருக்க கூடும் .
தமி.. மு..லிம்கள் தொண்டை வரைக்கும்தான்,நம்ப முடியாது.
சிறப்பாக கும்மியடித்து காய் நகர்த்துவார்கள்.