மலேசிய சூதாட்டக் கும்பல் தலைவர் என்று கூறப்படும் பால் புவா-வுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி அமெரிக்கப் புலனாய்வுத் துறை(எப்பிஐ)க்கு கடிதம் எழுதி அது சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருப்பது பற்றிக் கருத்துரைப்பதைத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் தவிர்த்தார்.
“அதை ஜாஹிட்டிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்”, என்றார்.
ஜாஹிட் , கடிதத்தை வெளியுறவு அமைச்சுவழி அனுப்பாமல் அரசதந்திர நடைமுறைகளை மீறியிருப்பதாக பிகேஆர் குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி அவரிடம் வினவப்பட்டது.
“இது ஒரு பெரிய விசயமல்ல. பிகேஆரின் வேலையே குறை சொல்வதுதானே, எதிரணி இல்லையா”, என்றாரவர்.
ரெண்டுன் ரெண்டு ஆப்பை ரெண்டும் கலண்ட ஆப்பை.
இதையே அன்வார் செய்திருந்தால் எல்லா அமைச்சர்களும் மூக்கை நுழைத்திருப்பார்கள்.
கப் சூப் இவன் நாவு சுட சுட belachan சூப்பு குடித்தால் வாயெல்லாம் கொப்பளித்து பேச முடியவில்லையாம் மலேசியா மருத்துவ அமைச்சு MC கொடுத்து வைத்து இருக்கிறது கவனம்