தேர்தலில் தாம் தோற்றுவிட்டதாக உணர்ந்த ராஜபக்ஷ, அழுதவாறு அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார்

rajapakk

இன்று (09) அதிகாலை அழுத வண்ணம் அலரி மாளிகையில் இருந்து புறப்பட்டார் மகிந்த ராஜபக்ஷ: சகோதரர்கள் எவரும் பக்கம் இல்லை நடந்து முடிந்த தேர்தலில் தாம் தோற்றுவிட்டதாக உணர்ந்த ராஜபக்ஷ, அழுதவாறு அதிகாலை வேளை அலரிமாளிகையில் இருந்து வேறு இடம் ஒன்றுக்குச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

முன்னதாக ரணில் விக்கிரம சிங்கவை அழைத்து அலரிமாளிகையில் வைத்து அவர் பேச்சு வார்த்தை நாத்தியுள்ளார். இருப்பினும் எந்த ஒரு உடன்பாட்டிற்கும் வர ரணில் விக்கிரமசிங்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதேவேளை இன்று மதியம்(இலங்கை நேரப்படி) தேர்தல் ஆணையாளர் யார் வெற்றிபெற்றார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே தாம் தேர்தலில் படுதோல்வியை அடைந்துவிட்டதாக மகிந்தர் உணர்ந்துள்ளார்.

முடிவுகள் கூட சரியாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன் நிலையில் பெரும்பாலும் மகிந்தர் தோற்றுவிடுவார் என்ற நிலை தோன்றியுள்ளது. குறிப்பாக அவர் வெற்றிபெறுவார் என்று கருதப்பட்ட பல இடங்களில், மகிந்தருக்கு எந்த வாக்குகளும் விளவில்லை. சிங்களத்தின் தேசிய தலைவர் தானே என்று மார் தட்டி திரிந்த அவருக்கு, சிங்களவர்களே நல்ல ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார்கள்.

தமிழர்கள் மத்தியில் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எவ்வளவு பிரபல்யமாக இருக்கிறாரோ, அது போல தான் சிங்கள மக்கள் மத்தியில் இருப்பதாக மகிந்தர் நினைத்துக்கொண்டார். ஆனால் இன்றுவரை தமிழர்கள் தேசிய தலைவரை ஒரு எள் அளவேனும் மறக்கவில்லை. அவரை கெளரவப்படுத்த தயங்கியதும் இல்லை.

ஆனால் சிங்கள மக்களே மகிந்தரை அப்படியே தூக்கி எறிந்துவிட்டார்கள். நொருங்கிப் போன மனிதராய், உடைந்து போன கண்ணாடியாய், சிதைந்து போனார் மகிந்தர். தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அவர் இறுதி நேரம் வரை எண்ணிப்பார்க்கவே இல்லை. புலிகள் இயக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நயவஞ்சகமாக உடைத்த இவருக்கு, தன்னைச் சுற்றி பின்னப்பட்ட மாயவலை தொடர்பாக அறிய முடியவில்லைப் போலும்.

எந்த வஞ்சகங்களை மகிந்தர் பாவித்தாரோ அதே வஞ்சகங்கள், இன்று அவர் கழுத்தை இறுக்கியுள்ளது. அரசை துறந்து, முடியை துறந்து, ஆட்சி அதிகாரத்தையும் துறந்து இன்று , வெறும் மகிந்தராக செல்லவேண்டிய நிலை தோன்றியுள்ளது. இனி இவர் தாராளமாக மரக்கறி விற்று பிழைப்பு நடத்தலாம். ஆனால் புலம்பெயர் தமிழர்கள் இனி விடுவார்களா ? என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ , தமிழர்கள் பொறுத்திருந்து பார்கலாமே…. இந்த சினிமாஸ்கோப் படத்தை …

-http://athirvu.com

அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த- ரணிலுடன் கடைசி நேரம்

மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார்.

மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  புதிய ஜனாதிபதியின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜனாதிபதி, புதிய ஜனாதிபதி கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்து மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.

ரணிலுடன் கடைசி நேரம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று அதிகாலை அலரி மாளிகையை விட்டுச் செல்வதற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது வாசஸ்தலத்துக்கு அழைத்து, அந்த கடைசித் தருணங்களில் சகல அதிகாரங்களையும் அவரிடம் முறையாக ஒப்படைத்து விட்டே அங்கிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

-http://www.tamilwin.com

TAGS: