பணியாளர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ அரசியல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்குத் தடை விதிக்கும் சுற்றறிக்கை ஒரு “நட்புமுறை நினைவூட்டல்” மட்டுமே என்று மலாயாப் பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.
இது ஒன்றும் புதிய விதிமுறை அல்ல என்றும் ஏற்கனவே எல்லா அரசாங்கம் அமைப்புகளிலும் அமலில் உள்ள ஒன்றுதான் என்றும் யுஎம் அனைத்துலக மற்றும் நிறுவன தொடர்பு அலுவலகத்தின் அறிக்கை கூறியது.
“யுஎம் அனுப்பி வைத்த கடிதம் யுஎம் பணியாளர்களுக்கு ஒரு நட்புமுறை நினைவூட்டல், அவ்வளவுதான்.
“அது ஒன்றும் புதிதல்ல. எல்லா அரசாங்க அமைப்புகளிலும் நடைமுறையில் உள்ள ஒன்றுதான்”, என்று அப்பத்திரிகை அறிக்கை கூறிற்று.