இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

englandபிரான்ஸ் பாணியில் இங்கிலாந்தை தாக்க அல்கொய்தா சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு உளவு நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்சில் நேற்று முன்தினம் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தையும் தாக்க அல்கொய்தா திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு உளவு நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம்ஐ5-ன் டைரக்டர் ஜெனரல் ஆன்ட்ரூ பார்கர் கூறுகையில், சமீபகாலமாக இங்கிலாந்து பொலிஸார் மற்றும் எம்ஐ5 சேர்ந்து மூன்று தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்.

இங்கிலாந்தில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து திட்டங்களையும் முறியடிப்பது கடினமான ஒன்று.

பிரான்ஸ் தாக்குதல் பாணியில் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்தி பலரை கொல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இங்கிலாந்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com