பிரான்ஸின் பாதுகாப்பு குறித்து அவசர அமைச்சரவைக் கூட்டம்

paris_hostages
பாரிஸ்- பயங்கரவாதத் தாக்குதல்களில் கடந்த மூன்று நாட்களில் 17 பேர் பலி

 

பாரிஸ் நகரில் மூன்று நாட்களாக நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் அரசாங்க அமைச்சர்கள் அவசர கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் உச்ச அளவில் பாதுகாப்பு எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டைப் பாதுகாப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாரிஸில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள ஒற்றுமைக்கான பேரணிக்காக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தப் பேரணியில் பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனி தலைவர்களுடன் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந்தும் கலந்துகொள்ளவுள்ளார். -BBC