சார்லி ஹெப்டோ கார்டூனை வெளியிட்ட ஜேர்மனி பத்திரிக்கை மீது அதிரடி தாக்குதல்

germany_attack_001பிரான்ஸ் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ தாக்கப்பட்டது தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்ட ஜேர்மனி பத்திரிக்கை அலுவலகம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜேர்மனி பத்திரிக்கை ஒன்று பிரான்ஸ் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ தாக்கப்பட்டது தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அந்த பத்திரிக்கை மீது இன்று நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அங்கிருந்த ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டதால் கடந்த வாரம் பிரான்சில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த 12 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பிரான்ஸ் தாக்குதல் சம்பவம். பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

கற்கள் மற்றும் எரியும் பொருட்களை பத்திரிக்கை அலுவலகத்தின் உள்ளே வீசி மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், பத்திரிக்கை அலுவலகத்தின் சில அறைகள் சேதம் அடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com