நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2,000 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக போர் புரியும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அந்நாட்டின் பல நகரங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதல் என பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
சமீபத்தில் போர்னோ மாகாணத்தில் பாகா நகரில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றி தீவிரவாதிகள் அதன் அருகிலுள்ள பாகா நகரின் பொதுமக்களை கொன்று குவித்துள்ளனர்.
அவர்களுடன் ராணுவமும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை நடந்த தாக்குதல்களில் மட்டும் 2 ஆயிரம் பேரை தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கூறப்படுகிறது.
-http://world.lankasri.com